நிரஞ்சனா முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும். காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். […]
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். நிரஞ்சனா பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர் விஸ்ரவா. இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள் இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை. குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது. “நாம் ஏன் இலங்கைக்கு அரசராகக் கூடாது.?” என்று இராவணனின் மனதில் ஆசை தோன்றியது. அண்ணன் குபேரனை […]
நிரஞ்சனா மனிதர்களில் யாருக்கு முதல் மதிப்பும் – மரியாதையும் என்று பார்த்தால் செல்வந்தர்களுக்கே அவை தரப்படுகிறது. “பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ள மனிதர்களுக்கு வருவதெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதர்களுக்கு சொந்தம் எல்லாம் அந்நியர்கள்;” என்று இன்னும் இன்னும் எத்தனையோ அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் நமக்கு தத்துவங்களாக கிடைக்கிறது. பணம் இருந்தால் போதும் குணம், ஒழுக்கம் எல்லாம் அநாவசியம் என்றாகிவிட்டது. நாங்கள் குணத்தை பார்த்துதான் மதிப்பு தருவோம், பணத்தை பார்த்து அல்ல“ என்று பலர் கூறுவார்கள். […]
நிரஞ்சனா மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம். கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் செல்வ வளத்தை அள்ளி தரும் மகாலஷ்மி, இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள். முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் […]
நிரஞ்சனா சோழங்கிபுரம் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் இருக்கும் பகுதி, இன்று சோளிங்கர் என்ற பெயருடன் விளங்குகிறது. வடஆற்காடு மாவட்டத்தில் திருத்தணிகைக்கு மேற்கே இருபது மைல் தூரத்திலே சுமார் நானூறு அடி உயரமுள்ள ஒரு மலைமேல் இருக்கிறது இந்த ஆலயம். மலையின் வளர்ச்சி கண்டு இந்திரன் திகைத்தன் ஸ்ரீயோகநரசிம்மர் ஆலயம் உருவானதற்கு முன்பு இந்த மலைக்கு வந்த பைரவேசுவரரிடம், “நான் கல் மலையாக இருப்பதில் என்ன பெருமை.? எனக்கு நல்வழி காட்டுங்கள்” என்று மலை வேண்டியது. “மலையே.. நீ உயர்ந்து […]
Written by Niranjana வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும் இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, […]
நிரஞ்சனா இறைவன் தன் பக்தனை காக்க எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வருவார். முன்னோர் காலத்தில் ஸ்ரீமந் நாராயணன் ஸ்ரீநரசிம்மராகவும், ஸ்ரீராமராகவும், ஸ்ரீகிருஷ்ணராகவும் அவதாரம் எடுத்தார். அதுபோல ஒரு அவதாரமே ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் அவதாரம். அது ஏன்? ஸ்ரீகரஞ்ச நரசிம்மர் என்றால் எப்படி இருப்பார்? என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, நாம் பிரகலாதனை பற்றி சுருக்கமாக தெரிந்துக்கொள்வோம். இரண்யனின் மகன் பிரகலாதன். தந்தையே மகனுக்கு வில்லனாக இருந்தார். இந்த வில்லனிடம் இருந்து குழந்தை பிரகலாதனை காக்கும்படி கேட்டுகொண்டார் கருடாழ்வார் ஸ்ரீமந் […]
நிரஞ்சனா நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல […]
நிரஞ்சனா ஒருவருக்கு யார் உதவி இருந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.? அரசியல்வாதிகளின் ஆதரவா?அல்லது நோய்களில் இருக்கும் போது மருத்துவர்களின் உதவியா? வழக்கு தொல்லை இருக்கும் போது வழக்கறிஞரின் உதவியா? இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். ஆம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அந்த தெய்வம் துணை இருந்தால் ஒருவருக்கு எந்த பழி பாவம் வந்தாலும் அவர்களுக்கு தெய்வமே துணை வருவார் பிரச்னையும் விடுப்படும். பாவ-புண்ணியங்களில் நம்பிக்கையில்லாமல் கொடுமை செய்கிற, கொடுமைக்கு துணை போகிறவர்களை எப்போது-எப்படி […]
நிரஞ்சனா புதுடெல்லி கன்னாட் பிளேஸில் இருக்கிறது அனுமான் மந்திர். ஸ்ரீ இராமரின் பக்தர் ஆஞ்சநேயர். அனுமனை வணங்கினாலே ஸ்ரீ இராமரின் அருள் கிடைத்துவிடும். அதேபோல் ஸ்ரீ இராமரை வணங்குபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருள் துணை கிடைக்கும். பாண்டவர்களுக்கு ஸ்ரீ அனுமனின் அருள் பாண்டவர்கள் பகடை விளையாட்டில், துரியோதனனிடம் தோற்றார்கள். இதனால் பாண்டவர்கள் நாட்டை இழந்து காட்டில் தங்கினார்கள். அப்போது ஒருநாள் திரௌபதி பீமனிடம் ஒரு தாமரை பூவை காட்டி, “இதுபோல் இன்னொரு தாமரை பூ வேண்டும்” என்றார். அதனால் […]