நிரஞ்சனா ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அதற்குரிய தெய்வத்தை வணங்கினால் நலம் பெறலாம். ஆனால் உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகள் இருந்தால் வைதீஸ்வரரையும், தன்வந்திரி பகவானையும் விட்டால் வேறு யாராலும் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதியை தீர்க்க முடியாது. இந்த தெய்வங்களின் அருளாசி இருந்தால்தான் மருந்து கூட வேலை செய்யும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மின்சாரம் எடுக்க இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை வளமான காற்றையும் தண்ணீரையும் நம்பி இருக்கிறோம். அதுபோல் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்காக உலகத்தில் எந்த மூலையில் […]
நிரஞ்சனா இராமாயணம். இந்தியாவின் உலகப்புகழ் பெற்ற இதிகாசம். வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை, சகோதர ஒற்றுமையை, விதியின் வலிமையை, நட்பின் மேன்மையை எடுத்துக்காட்டும் காவியம். அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்குமே இராஜவாழ்க்கை அமைந்துவிடாது, அவர்களும் குடும்ப போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்று உணர்த்துகிறது இராமாயணம். அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை இராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக சொல்கிறது. பாலகாண்டம் : இராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. […]
மகிமை நிறைந்த குருவாயூர் – பகுதி – 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் நிரஞ்சனா குருவையும், வாயுவையும் அழைத்துக் சென்று கொண்டிருந்த பரசுராமர், ஒரு இடத்தில் நின்றார். அந்த இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், அழகாகவும் இயற்கை வளமுடன் இருந்தது. “அடடா.. அற்புதம். என்னவொரு இயற்கை செழிப்பான இடம். இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறைவனே இங்கு இருப்பதாக ஓர் உள்ளுணர்வு எனக்கு உண்டாகிறது.” என்றார் குருபகவான். “ஆமாம் ஆமாம்… எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.” […]
நிரஞ்சனா கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற இந்த கிருஷ்ணர் கோவில். இந்த இடத்தை பூலோக வைகுண்டம் என்று பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் நிரந்தரமாக வசிப்பதாக ஐதீகம். இங்குள்ள கிருஷ்ணரின் சிலைக்கு நான்கு கைகள் இருக்கிறது. முதல் கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், இரண்டாம் கையில் சுதர்சன சக்கரத்தையும், மூன்றாவது கரத்தில் கௌமோதகி எனப்படும் கதையையும், நான்காவது கையில் தாமரை மலரையும் வைத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். […]
நிரஞ்சனா அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் – 609 704. நாகப்பட்டினம் மாவட்டம் அது ஒரு காட்டுப்பகுதி. பயமுறுத்தும் விலங்குகள் கூட அமைதியாக சுற்றி திரிந்தது. பறவைகள் கொஞ்சி விளையாடியது. சிங்கத்தின் முதுகில் ஒரு அணில் பயமின்றி ஏறி பயணித்தது. இக்காட்டுப்பகுதியின் அமைதியும் ரம்யமும் தவ முனிவர்களை கவர்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் இதுவே என்று தீர்மானித்தனர். உணவு உறக்கம் ஏதுமின்றி தவத்தில் ஈடுப்பட்டனர். தவம் கடுமையாக இருந்தது. இதனால் முனிவர்களின் உடல் மெலிந்து […]
நிரஞ்சனா அருள்மிகு ஸ்ரீபாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில் விட்டலாபுரம் – 627 304 திருநெல்வேலி மாவட்டம். கோயில் உருவான கதை 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசரின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலாராயன் என்ற விட்டலதேவன் ஆட்சி செய்து வந்தார். இவர் பகவான் பாண்டுரங்கன் மீது தீவிர பக்தி கொண்டு இருந்தார். எதையும் பாண்டுரங்கனால்தான் செய்ய முடியும் என்று அதிகமாக நம்பிக்கை கொண்டு இருப்பார். இவருடைய பக்தியை கண்ட எல்லோரும் பாராட்டி வணங்கும் பக்திமானாக திகழ்ந்தார். ஒருநாள் பாண்டுரங்க […]
நிரஞ்சனா திவாகர முனிவர் ஸ்ரீமன் நாராயணனை தன் மகனாக அடைந்து சீராட்டி வளர்க்க விரும்பினார். அதனால் ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து கடும் தவம் இருந்தார். முனிவரின் விருப்பத்தை ஏற்றுக் கொண்ட பெருமாள், குழந்தை உருவத்தில் திவாகர முனிவர் முன் தோன்றி “என்னை அன்பாக வளர்த்தால் நான் உங்களுடனே இருப்பேன். அதை மீறி என் மேல் சிறு கோபத்தை காட்டினாலும் அடுத்த நொடியே நான் உங்களை விட்டு பிரிந்து விடுவேன்.” என்றார். ஸ்ரீமன் நாராயணனின் இந்த நிபந்தனைக்கு சம்மதித்து குழந்தை […]
நிரஞ்சனா கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஸ்ரீஒப்பிலியப்பன் கோயில் சிறப்பை இன்று பார்ப்போம். ஸ்ரீமன் நாராயணனிடம் துளசிதேவி, “மகாலஷ்மியை தங்கள் மார்பில் சுமக்கிறீர்கள். அதுபோல் எனக்கும் உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்” என்றாள். “என்னுள்ளே இருக்கும் உனக்கு, எந்த இடத்தில் இடம் தருவது என நீயே சொல்” என்று துளசியை சமாதானம் படுத்தினார் பெருமாள். இருந்தாலும் துளசி மனம் சமாதானம் அடையவி்ல்லை.இனி எவ்வளவுதான் துளசியிடம் எடுத்துச் சொன்னாலும் துளசி கேட்கும் மனநிலையில் இல்லை என்று நினைத்து, “நீ […]
நிரஞ்சனா திருநெல்வேலியில் இருந்து 54.கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது சங்கரன் கோயில். சங்கரநாராயணன் தோன்றிய கதை ஒருமுறை பார்வதிதேவிக்கு, தன் கணவர் சிவபெருமான் உயர்ந்தவரா அல்லது தன் அண்ணன் ஸ்ரீமகாவிஷ்ணு உயர்ந்தவரா என்ற கேள்வி எழுந்தது. அதை மற்றவர்களிடமிருந்து அறிந்து கொள்ளவும் விரும்பினார். “சிவனுக்கு புலிதோலும் திருவோடும்தான் சொந்தம். மயானமே அவன் இருப்பிடம். அன்னபூரணியிடம் பிச்சை எடுத்தவர்” என்று சிவனை பற்றி விமர்சித்தார்கள் விஷ்ணுபக்தர்கள். “உன் அண்ணனான விஷ்ணுவை பற்றி குறை சொல்கிறோம் என்று தவறாக நினைக்க […]
நிரஞ்சனா திருவனந்தபுரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்கலா ஸ்ரீஜனார்த்தன சுவாமி கோயில். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்,திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபா சுவாமி, வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பெரிய சகோதரர், இவருடைய தம்பி ஸ்ரீ பத்மநாபசுவாமி. இளையவர்தான் வர்க்கலை ஸ்ரீஜனார்த்தன சுவாமி. சகோதரர்கள் மூவரின் கண்களும் ஒரே அமைப்பில் இருப்பது குறிப்பிடதக்கது. வர்கலா என்கிற இந்த இடமே அமைதியின் இருப்பிடம் என்றார் நாரதமுனிவர். ஒளிந்துக்கொண்டு விளையாடுவதில் குழந்தைகளுக்கு மட்டும் […]