நிரஞ்சனா இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம். […]
நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]
நிரஞ்சனா சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]
நிரஞ்சனா வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]
நிரஞ்சனா இறைவனுடைய நாமத்தை தினமும் உச்சரிக்க வேண்டுமா? அப்படி உச்சரித்தால் இறைவன் நம்மை வந்து பார்ப்பாரா? என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. மக்கள் அதிகம் இருக்கும் கூட்டத்தில் “சீனிவாசா” என்று அழைத்தால், அந்த கூட்டத்தில் தன்னை தான் அழைக்கிறார்களோ என்று, “சீனிவாசன்” என்ற பெயர் உள்ள அத்தனை பேரும் திரும்பி பார்ப்பார்கள். அதுபோல் இறைவனும் யார் நம்மை அழைப்பது என பார்ப்பார். அதனால்தான் மனிதர்களுக்கு இறைவனுடைய பெயர் வைக்கிறார்கள். புண்ணியம் தேடி தந்த ஹரிதாசர் பண்டரிபுரத்தில் […]
Written by Niranjana ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும். ‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை […]
நிரஞ்சனா நீ பெரியவனா? நான் பெரியவனா? என்று மனிதர்களுக்குள் வேண்டுமானால் போட்டி ஏற்படும். ஆனால் தெய்வங்களுக்கோ அத்தகைய போட்டி – பொறாமை கிடையாது. ஹரியும் சிவனும் ஒன்றே என பல சமயங்களில் நிரூபித்து உள்ளனர். சிவபெருமானை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும், ஸ்ரீமந் நாராயணனை வணங்குபவர்களுக்கு அதற்குரிய ஒரு பலனும் கிடைக்கிறது. ஆனால் சங்கரரையும் நாராயணனையும் ஒன்றாக நினைத்து, ஸ்ரீசங்கரநாராயணனாக வணங்கும் பொழுது பன்மடங்கு பலன்கள் கிடைக்கிறது. ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார். அதனால் ஸ்ரீவிஷ்ணு […]
நிரஞ்சனா இன்று ஏழை. நாளை பணக்காரன். இன்று நல்லவன். நாளை கெட்டவன் என்று வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அதனால்தான் நிச்சயம் இல்லாத மனித மனதுக்குள், இறைவன் இருக்கிறான் என்கிற நம்பிக்கையை உறுதியாக பதியவைத்தால் தீய செயல்பாடுகள் எதையும் செய்யாமல் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வழி கிடைக்கும். நல்ல வாழ்க்கையை நல்லவர்களுக்கு இறைவன் தருகிறான் தீயவர்களுக்கும் தருகிறான். இறைவனை பொறுத்தவரை எல்லோருமே அவன் பிள்ளைகள். தவறுகளை திருத்திக்கொண்டு இறைவன் தந்த நல்ல வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக்கொண்டால் இறைவன் […]
நிரஞ்சனா உத்தானபாதன் என்ற அரசருக்கு சுநீதி, சுருசி, என பெயருடைய இரு மனைவிகள் இருந்தனர். மன்னருக்கு இரண்டாது மனைவியான சுருசியையும் அவள் மூலமாக பிறந்த மகனான உத்தமனையும்தான் மிகவும் நேசித்தார். முதல் மனைவியான சுநீதியையும் அவள் மூலமாக பிறந்த மகனான துருவன் மீதும் பாசம் இல்லாமல் இருந்தார் அரசர் உத்தானபாதன். ஒருநாள் துருவன் தன் தந்தையை காண அரண்மனைக்கு சென்றான். அங்கு உத்தமன் தன் தந்தையின் மடியில் அமர்ந்திருப்பதை கண்டு தானும் தந்தையின் மடியில் […]
நிரஞ்சனா பகவத் கீதையானது யார் மீதும் அன்பு வைக்காதே என்றோ, உறவு-பாசம் என்பதை விட வெற்றி என்பதே லட்சியம், காரியத்தில் கண்ணாக இரு என்றோ பகவத் கீதை நமக்கு சொல்லவில்லை. மனிதன், மனித தன்மையோடு எப்படி வாழ வேண்டும் என்கிற வாழ்க்கை நெறியைதான் அது சொல்கிறது. பொறுமையால் கிடைத்த பகவத் கீதை ஒருவர் மன அமைதியில்லாமல் இருந்தால் அவரிடம் யார் என்ன சொன்னாலும், “தயவு செய்து என்னை அமைதியாக இருக்க விடுங்கள். நான் தனியாக இருக்க வேண்டும்.” […]