Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: அம்மன் கோயில்

கல்வியில் மேன்மை தரும் மும்பை பத்மாவதி தாயார்

நிரஞ்சனா    மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம். கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால்  செல்வ வளத்தை அள்ளி தரும்    மகாலஷ்மி,  இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள். முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் […]

பதினாறு செல்வங்களை தரும் முப்பாத்தம்மன்

நிரஞ்சனா   கோயில் அமைந்த இடம்: சென்னை தி நகரில் மகாராஜபுரம் சந்தானம் சாலையில் இருக்கிறது அருள்மிகு முப்பாத்தம்மன் ஆலயம். உண்மையான பக்திக்கு தெய்வம் தேடி வந்து உதவும். அதிலும் பெண் தெய்வங்களை பற்றி கேட்கவே வேண்டாம். ஒருவரின் தர்மநெறிக்கும், நேர்மைக்கும், அன்பு நிறைந்த பக்திக்கும் கட்டுப்படுகிற பெண் தெய்வங்கள் அந்த ஒரு பக்தருக்கு மட்டுமல்லாமல் அவரின் அடுத்தடுத்த தலைமுறைக்கும் துணை இருப்பார்கள். அப்படிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவள்தான் அன்னை சக்திதேவி. மகாசக்தியான அன்னை உமாமகேஸ்வரியை வணங்கினால் […]

குலதெய்வத்தை அறிவது எப்படி?

Written by Niranjana வாழ்வதற்கு காற்று எப்படி முக்கியமோ அதுபோல் குலம் தழைக்க குலதெய்வம் மிக முக்கியம். கிராமங்களில் மட்டுமல்லாமல் பெரிய நகரங்களில் வாழும் மக்களும்  இன்றுவரை அவரவர் குலதெய்வத்தை வணங்கிய பிறகே மற்ற தெய்வங்களை வணங்கும் வழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். சொந்த ஊரை விட்டு எந்த நாட்டில் வாழ்ந்தாலும் வருடத்திற்கு ஒருமுறையாவது தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து அவரவரின் குலதெய்வத்தை வணங்குவார்கள். இன்னும் பலர், குலதெய்வத்திற்கு திருவிழா நடத்துவதும் உண்டு. குழந்தைக்கு காது குத்துவது, […]

இன்றைய நாள் எப்படி இருக்கும்? தீப ஒளி சொல்லும் ஆருடம்

நிரஞ்சனா      நம் இஷ்ட தெய்வத்தை வேண்டி அழைக்கும் முறை எது? இறைவனுக்கு சாஸ்திரமுறைபடி நைவேதியம் தருவது எப்படி? அதுவும் வேத மந்திரங்கள் ஏதும் தெரியாத எளிய பக்தர்கள் எப்படி இறைவனுக்கு நைவேதியம் தருவது? பசியில் உள்ளவர்களுக்கு அன்னதானம் தந்தாலே அது இறைவனுக்கு தந்தது போலதான். இருந்தாலும், உணவு பொருள்களை நமக்காக படைத்த இறைவனுக்கு நம் நன்றியை காணிக்கையாக்கும் விதமாக வசதிக்கேற்ப உணவு தயாரித்து படைத்து, மந்திரங்கள் எதுவும் சொல்ல தெரியாத எளிய பக்தர்களும் இறைவனுக்கு நன்றி சொல்ல […]

நடராஜப் பெருமானின் இடது காலின் மகிமை

 நிரஞ்சனா மனிதர்களின் தேவைகளில் முதலாவதாக விரும்புவது பணம். அதற்கு அடுத்து, நல்ல உடல்நலம். ஆனால் தங்களுக்குகென்று ஏதும் விரும்பாமல் மற்றவர்களின் நலனே தம் நலன் என்று கருதுபவர்கள் யார் என்றால் அவர்கள்தான் மகான்கள். அந்த மகான்கள் விரும்புவது ஒன்றைதான் அதுதான் இறைவழிபாடு. மகிழ்ச்சியாக இருந்தாலும் வருத்தத்தில் இருந்தாலும் இறைவனே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள். இறைவனின் நினைவு மட்டுமே தம் உயிர் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கும் சில பிரச்சனைகள் எற்படுகிறது. அதன் காரணம் […]

இனிய வாழ்வு அமைய துணை நிற்கும் கோட்டை மாரியம்மன்

நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம் – கோட்டை மாரியம்மன் திருக்கோயில். இறைவன் நாம் விரும்புகிற இடத்தில் நிலைத்து இருக்க ஆயிரம் மந்திரங்களை உச்சரித்து வர்ணித்தாலும், இறைவன் தனக்கு விருப்பமான இடத்தைதான் தேடி சென்று அருள்புரிவார். குதிரையை கட்டாயப்படுத்தி தண்ணீர் குடிக்க வைக்க முடியாததை போல், இறைவனையும் நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எளிதானதல்ல. அதுவே இறைவன் விரும்பிவிட்டால், எத்தனை துஷ்டசக்திகள் தடுத்தாலும் அவற்றை வீழ்த்தி கடவுள், தன் பக்தனுக்கு துணை நின்று அருள் செய்ய வந்துவிடுவார். ஒரு இடத்தில் […]

மும்பாதேவி – பகுதி – 2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா காலங்கள் மாறியது. மும்பை கடற்கரைப் பகுதியில் கோலி என்கிற இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசித்தார்கள். அந்த மீனவ இனத்தில் முங்கா என்ற பெண் இருந்தாள். முங்கா அங்கு இருந்த மும்பாரக்தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள் முங்கா. அவள் எப்போதும் மும்பாரக்தேவியின் வழிப்பாட்டில் இருந்து தேவிக்கு சேவை செய்து வந்த காரணத்தால், அந்த பகுதி மீனவர்கள் அன்னை மும்பாரக்தேவியை செல்லமாக அந்த மீனவபெண்ணின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது மும்பாரக் […]

மும்பாதேவி

நிரஞ்சனா அசுரர்கள் வரம் பெற சிவபெருமானை நினைத்து தவம் செய்தால் உடனே அவர்களுக்கு வரத்தை தந்தவிடுவார் ஈசன். பிறகு வரம் பெற்றவர்கள் தருகிற இன்னல்கள் பெரியதாக இருக்கும். தந்த வரத்தை ஈசன் திரும்ப பெறவும் முடியாது. ஆனால் சக்திதேவி அப்படி அல்ல. தன்னை வணங்குபவர்களுக்கு வரத்தை அள்ளி தருவார். ஆனால் அதுவே வரம் கிடைத்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தினால் அதோடு தொலைந்தார்கள். அதுபோல் அசுரர்கள் வரம் பெற்றாலும் அந்த வரத்தால் நல்லவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அந்த வரத்தை […]

கண் திருஷ்டியை விரட்டும் குங்குமம்

நிரஞ்சனா இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம். […]

வெற்றி தரும் தெய்வம் -ஆதிராஜகாளியம்மன்

நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை பற்றி இப்போது அறிந்துக் கொள்வோம். கன்னிவாடி மலை என்றும் பன்றிமலை என்றும் அழைக்கப்படும் இந்த பகுதியில் முன்னொரு காலத்தில் போகர், தன் சீடர்களுடன் கன்னிபூஜை செய்ய தன் கமண்டலத்தில் உள்ள நீரை ஒரு கல்லின் மேல் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்தார். அந்த பெண்ணை “கன்னிவாடி” என்று அழைத்து, அந்த கன்னிபெண்ணை தெய்வமாக பாவித்து பூஜையை சிறப்பாக செய்தார். இருந்தாலும் பூஜையை முடிப்பதற்குள் அன்னை புவனேஸ்வரியம்மன் தோன்றி […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech