நிரஞ்சனா திருச்சியின் வடக்கே காவிரியின் வடகரையில் சுமார் 15 கி.மீ தொலைவில் இருந்தபடி பகதர்களின் குறைகளை தீர்க்கிறாள் சமயபுரத்து மாரியம்மன். ஸ்ரீரங்க வைணவி ஸ்ரீரங்கத்தில் வைணவியாக அம்மன் குடிகொண்டு இருந்தாள். வைணவி அதிக உக்கிர சக்தி கொண்டவளாக இருந்தாள். இதனால் ஸ்ரீரங்கத்தில் மழை இல்லாமலும் வெயிலாலும் அவதிப்பட்டார்கள் ஊர் மக்கள். இதற்கு வைணவி உக்கிர அம்மனே காரணம், வைணவியை வேறு இடம் மாற்றுங்கள் என வான சாஸ்திர ஜோதிடர் ஒருவர் ஐயர் சுவாமிகளிடம் கூறினார். “ஸ்ரீரங்கபெருமாளின் […]
நிரஞ்சனா கௌமாரியம்மன் வீரபாண்டி இந்த வீரபாண்டி என்ற தேனி என்கிற ஊரில் இருந்து கம்பம் போகும் பாதையில் 10.கி.மீ தொலைவில் இருக்கிறது அருள்மிகு கௌமாரி அம்மன் ஆலயம். இந்த ஆலயத்தை ஒட்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் இருக்கிறது. கௌமாரியம்மன் தோன்றிய வரலாறு தேவர்களையும், முனிவர்களையும் ஆட்டிபடைத்துகொணடு இருந்தான் ஓர் அசுரன். “அவன் பிடியில் இருந்து எங்களுக்கு விடுதலை வாங்கிகொடுங்கள்” என்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள் தேவர்கள். “மகிஷாசூரனை வீழ்த்திய சக்திதேவியால்தான் இந்த அசுரனை அழிக்க முடியும். பார்வதிதேவியே அந்த […]
நிரஞ்சனா கோவைக்கு மேற்கில் 6வது கி்மீ.யில் இருக்கிறது பேரூர். இங்குள்ள திருக்கோயில் ஸ்ரீ அங்காளம்மன் கோயில். சிவனும் பார்வதிதேவியும் பூலோகத்தில் இருக்கும் மக்களை நேரில் சந்திக்க விரும்பினார்கள். அதனால் இத்தெய்வ தம்பதிகள் பூலோகத்திற்கு வந்தார்கள். ஒரு காட்டுக்குள் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது ஒரு ஆற்றை கடந்தால்தான் ஊருக்குள் செல்லமுடியும் என்பதால் சக்திதேவி, தன் சக்தியை உபயோகப்படுத்தி பார்த்தாள். இதை கண்ட சிவபெருமான், “வேண்டாம் நாம் இப்போது மானிட உருவத்தில் இருப்பதால் அவர்களை போல் செயல்படவேண்டும். வா […]
நிரஞ்சனா இத்திருக்கருகாவூர்- திருக்களாவூர் மாயவரம் திருக்குடந்தை போகும் பாதையில் பாபநாசத்தில் உள்ளது. மாதவீச்வரர் உருவான சம்பவம் முல்லைகாடாக இருந்தது இந்த இடம். முல்லை காட்டில் மணலால் சுயம்புவாக தோன்றியது ஓர் லிங்கம். இந்த லிங்கத்தை சுற்றி முல்லைகொடிகள் படர்ந்து அந்த மணல் லிங்கத்தையே மறைத்திருந்தது. இதனால் இன்றும் அந்த மணல் லிஙகத்தில் முல்லைகொடியின் அடையாளம் தெரியும். இப்படி பல யுகங்களுக்கு முன்பே தோன்றிய இந்த லிங்கத்தின் பெயர் முல்லைவனநாதர் என்றும் மாதவீச்வரர் என்று அழைக்கப்படுகிறது. கர்ப்பரஷாம்பிகை […]
நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார். “மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி […]
நிரஞ்சனா சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர் தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் […]
நிரஞ்சனா மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.” பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் […]
நிரஞ்சனா திருமுல்லைவாயில் சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து 4. கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது. காஞ்சி தொண்டைவள நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் தொண்டைமான். இதனால் காஞ்சி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதே தொண்டை நாட்டின் வடபகுதியில் குறும்பாரிக் கோட்டை என்ற நகரில் ஓணன், வாணன், காந்தன் என்ற கொடிய அசுர குணம் படைத்த குறும்பர்கள் பைரவனை வணங்கி அவரையே தங்கள் நகருக்கு காவலாக வைத்திருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு செய்து வந்தனர். இதனால் […]
நிரஞ்சனா அங்காள பரமேஸ்வரி செஞ்சியிலிருந்து வடப் புறம் 20 கி.மீட்டர் தொலைவில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறாள். சிவனை பார்க்க கைலாசமலைக்கு பிரம்மன் வருகிறார். தூரத்தில் பிரம்மனை பார்த்த சக்திதேவி, பிரம்மனின் ஐந்து தலையை பார்த்து சிவன் என்று நினைத்து வணங்கி கொண்டே வந்தார். முகத்தை அருகில் பார்த்த பிறகுதான் தெரிந்தது பிரம்மன் என்று. “ஐந்து தலையை பார்த்த உடன் சிவன் என்று நினைத்துவிட்டீர்களா?. எனக்கும் ஐந்து தலை சிவனுக்கும் ஐந்து தலை.” என […]
நிரஞ்சனா மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில் கோயில் கொண்டு இருக்கிறாள் திருவுடையம்மன். அந்த ஊரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று மட்டும் கொட்டகையில் இருந்து தானாகவே கட்டை அவிழ்த்து கொண்டு ஓடிவிடும். பிறகு பல மணி நேரம் கழித்து அதுவே வீடு திரும்பும். ஒருசமயம் அந்த மாட்டின் உரிமையாளர் இந்த பசுவிடம் பால் கறக்க நினைத்தார். பசுவின் மடியில் பால் இல்லை. யாராவது இந்த பால் கறந்து திருடி இருப்பார்களோ என நினைத்தார். […]