Thursday 9th January 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: அம்மன் கோயில்

திருப்புமுனை தரும் மகாசக்தி தேவி

நிரஞ்சனாசுதமன் என்ற அரசர் மதுமந்தம் என்ற நாட்டை ஆட்சி செய்து வந்தார். இந்த அரசருக்கு “வித்யாவதி” என்ற அழகான மகள் இருந்தாள். பொதுவாக, “அழகாக இருப்பவர்களுக்கு அறிவு இருக்காது. அறிவு இருப்பவர்களுக்கு அழகு இருக்காது.” என்று சொல்வார்கள். ஆனால் இளவரசி வித்யாவதியோ அழகிலும், அறிவிலும் சிறந்து விளங்கினாள். தன் மகளுக்கு ஏற்ற நல்ல கணவன் கிடைக்க வேண்டும் என்பதால் அரசர் ஒரு அறிவிப்பு செய்தார். “எல்லா லட்சணங்களும் பொருந்திய நம் இளவரசிக்கு இணையான திறமைகளுடன் உள்ள ஒரு […]

பதவி பூர்வ புண்ணியம்

நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை  அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]

மலர்கள் தருகிற மலர்ச்சியான வாழ்க்கை

நிரஞ்சனா   வாசனை உள்ள இடத்தில்தான் தெய்வம் இருக்கும்.வாசமான மலர்களை கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால்,அவ்வாறு அர்ச்சனை செய்தோருக்கு நல்லவை யாவும் வசியம் ஆகும்.வாழ்க்கையில் நல்ல மாற்றமும் ஏற்றமும் ஏற்படும். பீமன், தாமரை மலரை தேடி போனபோதுதான் பீமனுக்கு ஸ்ரீஅனுமானின் தரிசனமும் அருளும் கிடைத்தது. ஸ்ரீஅனுமானின் அருளை பெற்ற பிறகுதான் காட்டில் இருந்த பாண்டவ சகோதரர்கள், நாட்டை ஆளும் யோகத்தை பெற்றார்கள். இவ்வாறாக மலர்கள் ஒருவரின் வாழ்வை நல்ல விதத்தில் மாற்றும் சக்தி படைத்தது. மலர்களுக்கு மருத்துவ குணமும் […]

ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை

Written by Niranjana ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும். ‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை […]

நினைத்ததை நிறைவேற்றி தரும் சூலக்கல் மாரியம்மன்

நிரஞ்சனா கோயம்புத்தூரில் அமைந்துள்ளது சூலக்கல் மாரியம்மன் கோவில். இறைவன் எப்படி காட்சி தருவார் – எவ்வாறு காட்சி தருவார் என்று யாராலும் தெரிந்துகொள்ள முடியாது. இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் இறைவன் தம் பிள்ளையாகவே நினைத்து அவர்களுக்கும் தன் அருள்பார்வையை செலுத்த வருடத்திற்கு ஒருமுறை வீதி உலா வருகிறார். இதனால் தம் பிள்ளைகளான எல்லா ஜீவராசிகளுக்கும் கடவுள் தரிசனம் தருகிறார். இறைவனின் அருள்பார்வை பெற்றவர்கள் பெரிய பாதகத்தில் இருந்து தப்பிக்கிறார்கள். பெற்றோரை மதிக்காத பிள்ளைகளை எந்த பெற்றொரும் வெறுத்து […]

சென்னையில் விநாயகருக்கு திருமணம் நடந்த இடம்

நிரஞ்சனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.: ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற  பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் […]

விரோதங்களை நீக்கும் கொண்டத்துக்காளியம்மன்

நிரஞ்சனா கோயம்புத்தூர் மாவட்டம், பெருமாநல்லூரில் உள்ள அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோயில். ஒருவரது முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க வேண்டுமானால் அதற்கு தெய்வ அருளும் வேண்டும். எல்லா தெய்வங்களும் வெற்றி தரும் தெய்வங்கள்தான் என்றாலும், அன்னை சக்திதேவி ஜெயத்தை வழங்குவார். அதனால் துர்கை வடிவத்தில் இருக்கும் அன்னை சக்திதேவியை, “ஜெயஜெய தேவி, ஸ்ரீதுர்கா தேவி” என்று போற்றுவர். சேரநாட்டின் மன்னர் ஒருவர், போரில் வெற்றி பெற என்ன வழி? என்று பலரிடம் ஆலோசனை நடத்தினார். ஆனால் ஆலோசகர்கள் சொல்லும் யோசனை […]

தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைகாசு அம்மன்

நிரஞ்சனா அரைகாசு அம்மன் திருக்கோயில், சென்னை ரத்னமங்கலம், வண்டலூர். அரை காசு அம்மன் உருவான கதை புதுக்கோட்டையில் வீற்றிருக்கும் அன்னை அருள்மிகு பிரகதாம்பாளை வணங்கி வந்தார்கள் புதுக்கோட்டையை ஆட்சி செய்து வந்த மன்னர்கள். புதுக்கோட்டை பிரகதாம்பாளுக்கு திருவிழா போன்ற விழாகள் எடுக்கும் போது, அம்மனை மகிழ்விப்பதற்காக அம்மன் உருவத்தை அரை காசியில் பதித்து திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கும் வழக்கம் இருந்தது. “புதுக்கோட்டை பிரகதாம்பாள்“ என்று இந்த அம்மனின் பெயரை சிலருக்கு உச்சரிக்க வராததால் நாளடையில் “அரைகாசு […]

தடைகளை நீக்கும் கோவை தண்டுமாரியம்மன்

நிரஞ்சனா   முகவரி: அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூர் – கோவை மாவட்டம் இறைவன் தரும் நம்பிக்கை   நாம் நம்மை நம்புகிறோமோ இல்லையோ ஆனால் இறைவனை நம்பிக்கையுடன் வணங்குகிறோம். அந்த நம்பிக்கையே நமக்கு மேலும் வெற்றியை தருகிறது. இப்படி இறைவனை நம்பி வெற்றி பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் வரலாற்று கால அரசர்களும் உண்டு. ஏன் அரசர்களை பற்றி சொல்கிறேன் என்றால், அரசர்கள் தங்கள் குடும்பத்திற்காக மட்டுமல்லாமல், தங்கள் நாட்டுக்காகவும் போராட வேண்டும். போராட்டம் நிறைந்த அரசர்களின் […]

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி தரும் வெற்றி

நிரஞ்சனா முகவரி: அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி திருக்கோயில், அய்யாவாடி – தஞ்சாவூர் மாவட்டம். எப்போதெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ அப்போதெல்லாம் தெய்வ அவதாரங்கள் உருவாகும். இதற்கு எடுத்துகாட்டாக பிரத்தியங்கிரா தேவி உருவானார். நல்லவர்கள் செய்யும் நல்லவற்றுக்கு துணை இருந்து, அவர்களை வெற்றியடைய செய்கிறாள். தீயவர்கள் இந்த தேவியை வணங்கினால் அவர்களுக்கு இந்த அம்மன் உதவி செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. நல்ல உள்ளத்தோடு வணங்கினால் அவர்களை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாதபடி நிழல் போல் தேவி துணை நின்று காப்பாள். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »