Written by Niranjana ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும். ‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை […]
நிரஞ்சனா சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில், சென்னை நகரின் மேற்குப் பகுதியில் பாடி என்னும் இடத்தில் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.: ஒருவரின் வாழ்நாளில் நல்ல மாற்றங்கள் ஏற்பட இன்னாரால்தான் முடியும் என்று இறைவன் எழுதிவைத்தால் அப்படிதான் நடக்கும். இதை குருபகவானே அனுபவத்தில் உணர்ந்தார். ஆம். குரு பார்த்தால் கோடி புண்ணியம் என்பார்கள். ஆனால், தன்னுடைய மகனான பாரத்வாஜ மகரிஷி, கரிக்குருவியின் (வலியன்) என்கிற பறவை உருவத்தில் பிறந்திருக்கிறானே என்று மனம் […]
நிரஞ்சனா சென்னையிலிருந்து தேனிக்கு சென்று, அங்கிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் குச்சனூர். இவ்வூருக்கு தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. மனித உருவத்தில் வரும் சனிஸ்வரர் சனிபகவானை போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின் ஆதிக்கம் ஒருவருக்கு நல்ல விதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது யோகம் ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள் வந்து சேரும். சிவனே சனிஸ்வரருக்கு […]
நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன், சிவபெருமானை கண்டும் வணங்காமல் ஆணவமாக சென்று விடுகிறார். “மகாவிஷ்ணுவே மகேஸ்வரனை வணங்கிவிட்டு செல்கிறார். ஆனால் இந்த பிரம்மனின் கர்வத்தை பாருங்கள்“ என்று கைலாய மலையில் இருக்கும் தேவரிஷிகள் பேசி கொண்டார்கள். ஆனால் ஈசன், பிரம்மனின் செயலை பெரியதாக எடுத்து கொள்ளவில்லை. இருந்தாலும், உலகமே வணங்கும் தம் கணவரை, பிரம்மதேவன் இப்படி அலட்சியம் செய்கிறாரே என்று மனம் வருந்தினார் அன்னை பார்வதிதேவி. தன் மனகவலையை தன் கணவரிடமும் சொன்னார் தேவி. இதனால் பிரம்மனை அழைத்த […]
நிரஞ்சனா சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் குடி கொண்டிருக்கும் யோக பைரவர். பொதுவாக பைரவர் சூலம் மற்றும் நாய் வாகனத்துடன்தான் காட்சி தருவார். ஆனால் இந்த ஆலயத்தில் யோக நிஷ்டையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருவதால் “யோகபைரவர்” என்று அழைக்கப்படுகிறார். பைரவர் உருவான கதை சிவபக்தரான இரண்யாட்சகனுக்கு அந்தாகாசூரன், சம்பாசூரன் என இரண்டு மகன்கள் பிறந்தார்கள். இவர்கள் இருவரும் கூட சிவபக்தர்களாக இருப்பதால் தட்டி கேட்க ஆள் இல்லாமல் தேவர்களையும், முனிவர்களையும் கொடுமை செய்து வந்தார்கள். இதனால் […]
நிரஞ்சனா திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் மிகவும் பிரபலமானது. விநாயகப் பெருமான் மிகவும் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் அமர்ந்து தரிசனம் தருவதால் உச்சிபிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். இவரை தரிசிக்க 400மேற்பட்ட படிகள் ஏறிதான் தரிசிக்க முடியும். இத்தனை உயரத்தில் விநாயகர் அமர்ந்த காரணத்தை பார்ப்போம். திருச்சிக்கு வந்து மலைமேல் அமர்ந்தார் உச்சிபிள்ளையார் ஸ்ரீராமர், இராவணனிடம் போர் செய்து சீதையை மீட்டு வந்தார். சீதையை மீட்க விபீஷணனும் துணையிருந்ததால் அசுரகுலத்தில் […]
நிரஞ்சனா திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் பாங்கோடு என்ற இடத்தில் சாஸ்தா நகரில் ஒரு விலங்கு ஒன்றின் மேல் அமர்ந்திருக்கிறார். ஆம்.. சாஸ்தா பொதுவாக புலி மீது அமர்ந்திருப்பதைதான் பார்த்திருக்கிறோம் ஆனால் இநத வனசாஸ்தா குதிரை மேல் அமர்ந்திருக்கிறார் அதன் காரணத்தை பார்ப்போம். திருவிதாங்கூர் நாட்டின் அரசர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா, ஒருசமயம் குதிரையில் நகர்வலம் வந்துக் கொண்டு இருந்தார். உடன் வந்தவர்களுடன் பேசி கொண்டே வந்தாலும் ஏதோ காரணத்தால், இல்லை இல்லை… […]
நிரஞ்சனா “இந்த ஊரிலேயே பிறந்து இந்த ஊரிலேயே வளர்ந்த எங்ககிட்ட பணம் இல்லை. ஆனா சொந்த ஊரைவிட்டு வந்த உங்க கிட்ட மட்டும் எப்படி சேடு எங்க ஊருக்கே கடன் தர அளவுக்கு கட்டு கட்டா பணம் இருக்கு” இது ஒரு படத்தில் மார்வாடி சேட்டிடம் நடிகர் ஒருவர் பேசிய வசனம். இதை சிந்தித்து பார்த்தால் உண்மையாகதானே இருக்கிறது. எதனால் வடஇந்தியர்களிடம் பணம் கொட்டி கிடக்கிறது என்றால் காரணம் ஸ்ரீமகாலஷ்மியின் பேரருள் அவர்களுக்கு இருக்கிறது. அவள் விரும்பி […]
நிரஞ்சனா மாமல்லபுரம் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றம் இருக்கிறது. திருக்கழுக்குன்றம் என்கிற பெயர் வந்த காரணம், இன்று வரை இந்த பகுதிக்கு இரண்டு வெள்ளை கழுகுகள் மதிய வேளையில் வருகிறது. சிறு குழந்தைக்கு உணவு ஊட்டுவது போல் அந்த இரண்டு கழுகுகளுக்கு பண்டாரங்கள் உணவு ஊட்டுவார்கள். யார் இந்த கழுகுகள்? பிரம்ம புத்திரர்கள் எட்டு பேர், சாரூப பதவி வேண்டி கடும் தவம் இருந்தார்கள். சிவபெருமானும் இவர்களின் தவத்தை மெச்சி காட்சி கொடுத்தார். தங்கள் தவத்தை ஏற்று சிவன் […]
நிரஞ்சனா சனி சிங்கனாப்பூர் என்கிற ஊர், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கிற ஷீர்டியில் இருந்து சுமார் எழுபது கிலோ மீட்டர் தொலையில் உள்ளது. இங்குள்ள தெய்வத்தை சனிமகராஜ் என்று மக்கள் அழைக்கிறார்கள். சிங்கனாப்பூரின் கிழக்கே பனாஸ்நாலா ஆற்றில் சுமார் 160 வருடங்களுக்கு முன்பு விடாமல் பெய்த மழையால் பனாஸ்நாலா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது அந்த ஆற்றில் ஒரு பெரிய கல் மிதந்து கொண்டு வந்து கரையோரமாக இருந்த கொடியில் சிக்கி கொண்டது. அப்போது அந்த பக்கமாக […]