Written by Niranjana 28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் […]
Written by Niranjana ஒருவர் அதிக வசதியோடு இருந்தால், “அவனுக்கு என்னய்யா சுக்கிர திசை.“ என்பார்கள். அதுவே உடல் மெலிந்து கருத்து போய் வறுமை அடைந்தவரை பார்த்தால், “இது எல்லாம் ஏழரை சனியால் வந்த தொல்லை. சும்மா வாட்டி வதைக்கும் பாவம்.“ என்று கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சனிஸ்வரர், மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே, ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு. காடாறு மாதம் நாடாறு மாதம் என்று இருந்தாலும் யாருக்கும் […]
Written by Niranjana நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். […]