Written by Niranjana கும்பகோணத்துக்கு அருகே நாச்சியார் கோவிலுக்குப் பக்கத்தில் உள்ள திருநரையூரில் இருக்கும் ராமநாத ஸ்வாமி திருக்கோயிலில் குடும்பத்தோடு தன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் சனீஸ்வர பகவான். வாழ்வில் வெற்றி பெற எது தேவை? ஒரு முனிவர் இருந்தார். அவர் 100 வயதை கடந்தவர். அவரிடம் நிறைய சிஷ்யர்கள் இருந்தார்கள். அதில் ஒரு சிஷ்யன், “சுவாமி… வாழ்க்கையில் வெற்றி பெற என்ன வேண்டும்.?” எனக் கேட்டான். அதற்கு அந்த குரு, தன்னுடைய பொக்கை வாயை […]
Written by Niranjana ஒரு இல்லத்தில் சுபநிகழ்ச்சி நடப்பதற்கு அடையாளமாக வீட்டின் முன் மாவிலைத் தோரணம் கட்டுவார்கள். மாவிலையில் ஸ்ரீமகாலஷ்மி வாசம் செய்கிறாள். அதனால் சுபநிகழ்ச்சி நடக்கும் இல்லத்துக்கு ஸ்ரீமகாலஷ்மியும் முக்கிய விருந்தினராக வர வேண்டும் என்பதற்கு அழைப்புதான் மாவிலைத் தோரணம். அதுபோலவே கோலங்களும். ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது. நன்மைகளும் வந்தடையும். மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் […]
Jun 8 2017 | Posted in
Headlines,
Spiritual,
அம்மன் கோயில்,
ஆன்மிக பரிகாரங்கள்,
ஆன்மிகம்,
ஆன்மிகம்,
கதம்பம்,
கோயில்கள்,
பிற கோயில்,
பெருமாள் கோயில்,
முதன்மை பக்கம் |
Read More »
Written by Niranjana 07.06.2017 அன்று வைகாசி விசாகம்..! ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகிமை இருக்கிறது. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது, கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது. அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் உருவான மாதம். இந்த வைகாசி மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் சக்தி நிறைந்திருக்கிறது. வசிஷ்ட மகரிஷியிடம் மஹாராஷ்டிர தேசத்தின் மன்னனான விச்வசேனன் என்பவர், “என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?“ எனக் கேட்டார். நடந்தவை […]
கண் திருஷ்டியை நீக்கும் பூசணிக்காய்
Written by Niranjana 10.05.2017 அன்று சித்ரா பவுர்ணமி! சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த […]
28.04.2017 அன்று அட்சய திருதியை Written by Niranjana அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, […]
Written by Niranjana 09.04.2017 அன்று பங்குனி உத்திரம். திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண […]
Written by Niranjana 05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி! பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம். நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான். தந்தை […]
Written by Niranjana மத்திரத் தேசத்தின் அஸ்வபதி என்ற அரசனுக்கு மாளவி என்ற குணவதியான மனைவி இருந்தாள். “அரசன் என்ற பதவியை கொடுத்த இறைவனால், தந்தை என்ற பதவியை கொடுக்க முடியவில்லையே…“ என்ற கவலை அஸ்வபதி தம்பதினருக்கு வாட்டியது. தன் கவலையை நாரதர் முனிவரிடம் சொல்லி வருத்தபட்டார் அரசர். “கவலை வேண்டாம். இறைவன் உங்களுக்கு பெரும் செல்வமான குழந்தை செல்வத்தை தருவார். நீங்கள் சாவித்திரி தேவியை மனதால் நினைத்து விரதம் இருந்து யாகம் செய்யுங்கள்“ என்றார் நாரத […]
11.03.2017 அன்று மாசி மகம் Written by Niranjana மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக […]