Wednesday 27th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிகம்

மீனவரை தேடி வந்து உதவிய செங்கழுநீர் அம்மன்

நிரஞ்சனா அருள்மிகு செங்கழுநீர் அம்மன் திருக்கோயில் வீராம்பட்டினம் – புதுச்சேரி மாவட்டம்.    மீனவர் வீரராகவர் பரதவர்கள். இவர்கள் கடல் சார்ந்த தொழில் செய்பவர்கள். 450ஆண்டுகளுக்கு முன்பு இந்த பரதவர் குலத்தில் பிறந்த வீரராகவர் என்ற மீனவர், தினமும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வார். தினமும் மீன்பிடித்துதான் சம்பாதிக்க வேண்டும். ஏனோ இவரின் வலையில் மட்டும் பெரிய அளவில் மீன்கள் கிடைக்காது. கடலில் மீன் பிடிக்கவில்லை ஒருநாள் செல்லவில்லை என்றாலும் அவர் குடும்பம் பசியில் வாடும். இப்படி […]

நோய் தீர்க்கும் தெய்வ மருத்துவர்

நிரஞ்சனா ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் அதற்குரிய தெய்வத்தை  வணங்கினால் நலம் பெறலாம். ஆனால் உடல் உபாதைகள், உடல்நலக் கோளாறுகள் இருந்தால் வைதீஸ்வரரையும், தன்வந்திரி பகவானையும் விட்டால் வேறு யாராலும் மருத்துவரால் கைவிடப்பட்ட வியாதியை தீர்க்க முடியாது. இந்த தெய்வங்களின் அருளாசி இருந்தால்தான் மருந்து கூட வேலை செய்யும். என்னதான் விஞ்ஞானம் வளர்ந்திருந்தாலும் மின்சாரம் எடுக்க இறைவனால் படைக்கப்பட்ட இயற்கை வளமான காற்றையும் தண்ணீரையும் நம்பி இருக்கிறோம். அதுபோல் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்காக உலகத்தில் எந்த மூலையில் […]

கல்வியும் தைரியமும் அருளும் ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி

நிரஞ்சனா முகவரி: அருள்மிகு ஸ்ரீ வித்யா ராஜராஜேஸ்வரி திருக்கோயில், நேரு காலனி, பழவந்தாங்கல் நங்கநல்லூர், சென்னை. ஒருசமயம் காஞ்சி மகாபெரியவர், சென்னை பரங்கிமலை அருகில் இருக்கும்  நந்தீஸ்வரரை வணங்க வேண்டும் என்று விரும்பினார். அதேபோல பழவந்தாங்கல், நங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோயில்களை தரிசிக்க, பக்தர்களுடன் பாதயாத்திரையாக சென்னை வந்தார்கள்.  சுவாமிகள் திரிசூலம் வந்தாகள். அங்கு கோயில் கொண்டிருக்கும் திரிசூலநாதரையும், திரிபுரசுந்தரியையும் தரிசித்து விட்டு பழவந்தாங்கல் வந்துக்கொண்டு இருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் களைப்படைந்த சுவாமிகளும் பக்தர்களும், […]

நினைத்ததை நிறைவேற்றும் மகாமாரியம்மன் – சிங்கப்பூர்

நிரஞ்சனா “கோவில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்” என்றனர் நம் ஆன்றோர்கள். இந்த வார்த்தையை வேதமாக ஏற்று நடப்பவர்கள்  இந்தியர்களாகிய நாம். “அந்த புதிய ஊர் (அ) நாடு, உன் வாழ்க்கைக்கு நல்ல மாற்றம் தரும். நீ அங்கு செல்” என்று இறைவன், பக்தர்களுக்கு உணர்த்துவார். இதனால் வேலை வாய்ப்புக்காக, முன்னேற்றத்திற்காக நாம் ஊர் விட்டு ஊரோ, அல்லது நாடு விட்டு நாடோ போக வேண்டிய சூழ்நிலை பெறுவோம். இப்படி ஒரு புதிய இடத்திற்கு போனவுடன், […]

அவ்வை தன் மகள் திருமணத்தில் செய்த அதிசயம்

நிரஞ்சனா சேலம் மாவட்டத்தில் உள்ளது அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில். கிளி கண்டறிந்த சிவலிங்கம் ஜீவராசிகளின் படைப்பின் இரகசியத்தை பற்றி முனிவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார் பிரம்மன். சிவ வழிபாடே சிறந்த வழிபாடு என்று வாழ்ந்து வரும் சுகமுனிவர், பிரம்மன் கூறுவதை கேட்டுவிட்டு கோபம் கொண்டு, “ஜீவராசிகளின் படைப்பை பற்றிய இரகசியத்தை வெளிப்படையாக உன் கணவர் சொல்லிக் கொண்டு இருக்கிறார்”. என்று சரஸ்வதியிடம் முறையிட்டார்.  சரஸ்வதியிடம் தம்மை பற்றி சுகமுனிவர் குறைச் சொன்னதை அறிந்து ஆத்திரம் அடைந்த பிரம்மன், […]

கிஷ்கிந்தா காண்டம் படித்தால் விரோதிகள் வீழ்வர்

நிரஞ்சனா இராமாயணம். இந்தியாவின் உலகப்புகழ் பெற்ற இதிகாசம். வாழ்க்கையின் தத்துவங்களை, ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை, சகோதர ஒற்றுமையை, விதியின் வலிமையை, நட்பின் மேன்மையை எடுத்துக்காட்டும் காவியம். அரச குடும்பத்தில் பிறந்த அனைவருக்குமே இராஜவாழ்க்கை அமைந்துவிடாது, அவர்களும் குடும்ப போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்று உணர்த்துகிறது இராமாயணம். அந்த போராட்டங்களையும் நல்ல நட்பின் துணைக்கொண்டால் வெற்றி நிச்சயம் என்பதை இராமாயணத்தின் ஏழு காண்டங்கள் நமக்கு சம்பவங்களாக சொல்கிறது. பாலகாண்டம் : இராமன் மற்றும் அவன் சகோதரர்களின் பிறப்பு. […]

இறைவன் சூட்டிய பெயர் குருவாயூர்

மகிமை நிறைந்த குருவாயூர் – பகுதி – 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும்   நிரஞ்சனா குருவையும், வாயுவையும் அழைத்துக் சென்று கொண்டிருந்த பரசுராமர், ஒரு இடத்தில் நின்றார். அந்த இடம் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும், அழகாகவும் இயற்கை வளமுடன் இருந்தது. “அடடா.. அற்புதம். என்னவொரு இயற்கை செழிப்பான இடம். இந்த இடம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இறைவனே இங்கு இருப்பதாக ஓர் உள்ளுணர்வு எனக்கு உண்டாகிறது.” என்றார் குருபகவான். “ஆமாம் ஆமாம்… எனக்கும் அவ்வாறே தோன்றுகிறது.” […]

மகிமை நிறைந்த குருவாயூர்

நிரஞ்சனா கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது புகழ் பெற்ற இந்த கிருஷ்ணர் கோவில். இந்த இடத்தை பூலோக வைகுண்டம் என்று பக்தர்களின் நம்பிக்கை. இங்கு ஸ்ரீகிருஷ்ணபகவான் நிரந்தரமாக வசிப்பதாக ஐதீகம். இங்குள்ள கிருஷ்ணரின் சிலைக்கு நான்கு கைகள் இருக்கிறது. முதல் கையில் பாஞ்சஜன்யம் என்ற சங்கையும், இரண்டாம் கையில் சுதர்சன சக்கரத்தையும், மூன்றாவது கரத்தில் கௌமோதகி எனப்படும் கதையையும், நான்காவது கையில் தாமரை மலரையும் வைத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். […]

புனித ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

விஜய் கிருஷ்ணாராவ்  நிச்சயமாக பயபக்தியுடையோருடனும் எவர் தம் செயல்களை அழகாக்கி வைக்கிறார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான் (16:128) – “திருக்குர்ஆன்” என் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனிதரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.!         நிரஞ்சனா  இறைவன்தான் அனைத்திற்கும் முதல்வன். அவனால்தான் அனைத்தும் படைக்கப்பட்டன. இந்த விண்ணும் அதில் பிரகாசிக்கும் சூரியனும், சந்திரனும், தாரகைகளும் அவனுடைய படைப்புகளின் அடையாளங்களாகும். அவற்றை ஆய்ந்து, உணர்ந்து சிந்தித்தோமானால் இறைவனை அடைய முடியும். – “திருக்குர்ஆன்” என் இனிய இஸ்லாமிய […]

வெங்காயத்தில் இறைவனின் ஆயுத வடிவம்;சாய்பாபா சொன்ன விளக்கம்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா  சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன? என்பதை பற்றி இப்போது பார்ப்போம். நாச்னே என்பவர் தன் மாமியருடனும் மற்ற உறவினர்களுடன் பாபாவை தரிசிக்க சீரடி வந்தார். மகான் சாய்பாபா, அவர்களை ஷீரடியில் சில நாட்கள் தங்கும் படி சொன்னார். அவர்களும் பாபாவின் பேச்சுக்கு மறு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech