Tuesday 26th November 2024

தலைப்புச் செய்தி :

கனமழை : புதுச்சேரி..காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை *|
Category archives for: ஆன்மிகம்

பாம்பன் சுவாமிகள்

Written by Niranjana  பாம்பன் என்ற ஊரில் செங்கமல அம்மையார் – சாத்தப்பபிள்ளையின் மகனாக பிறந்தவர் அப்பாவு. இவரே பின்னாளில் பாம்பன் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இவர் 1850-ல் பிறந்தார் என்று சொல்கிறார்கள். 1866-ஆம் ஆண்டு தன் படிப்பை தொடங்கினார். முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இருந்தே இவர், கந்தசஷ்டி கவசத்தை விரும்பி படிக்கத் தொடங்கினார். அத்துடன் சேது மாதவஅய்யர் என்பவரிடம் வடமொழியும் கற்றார். தமிழ்மொழியை மேலும் கற்பதில் ஆர்வமாக இருந்தார் சுவாமிகள். காரணம் […]

எட்டுக்குடி முருகனை வணங்கினால் உடல் உபாதைகள் நீங்கும்: இன்பமான வாழ்க்கையும் எட்டிபிடிப்போம்.

Written by Niranjana முகவரி: அருள்மிகு எட்டுக்குடி முருகன் திருக்கோயில், எட்டுக்குடி- நாகப்பட்டினம் மாவட்டம். கோவில் உருவான கதை  நாகப்பட்டினத்தின் அருகில் பொருள்வைத்தசேரி என்ற கிராமத்தில் சிற்பி ஒருவர் இருந்தார். இவர் சிறந்த முருகன் பக்தர். இவருடைய மனமும் நாவும், “ஓம் சரவண பவ” என்ற உச்சரித்து கொண்டே இருக்கும். அப்போது அவருக்கு ஒரு சமயம் முருகன் சிலை செய்ய வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அழகான முருகன் சிலையை செதுக்கிகொண்டு இருந்தார் சிற்பி. அப்போது அந்த பக்கமாக […]

வலம்புரிச்சங்கு இருக்கும் வீட்டில் யோகம் சேரும். தடைகள் நீங்கும்.

Written by Niranjana  வீட்டில் வலம்புரிச் சங்கை வைத்து பூஜித்தால், லஷ்மி கடாட்சம் நிறைந்து இருக்கும். வலம்புரிச்சங்கின் மெல்லிய ஒலி, பூஜை அறைக்கு இன்னும் சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு இல்லத்திற்கும் குறிப்பிட்ட அதிர்வுகள் இருக்கும். அதில் நல்ல அதிர்வைக் கிடைக்கச் செய்யும் ஆற்றல், வலம்பரிச் சங்கிற்கும் அதன் ஒலிக்கும் இருக்கிறது. அதேபோல, நீத்தார் உடல் உள்ள வீட்டில் துஷ்ட ஆத்மாக்களும் அழையாத விருந்தாளியாக வரும். அதை விரட்டவே மரண வீட்டில் ஒருவித சங்கை ஊதுவார்கள். அந்த சங்கின் […]

திருமணம், சந்தான, கல்வி தடைகள் நீக்கும் மல்லீகேஸ்வரர்-மண்ணடி

Written by Niranjana அருள்மிகு மரகதாம்பாள் சமேத மல்லீகேஸ்வரர் திருக்கோயில், மண்ணடி- சென்னை கோவில் உருவான கதை தொண்டை நாட்டில் மக்கள் தொகை அதிகம் ஆனதால், நாட்டை விரிவாக்கம் செய்ய தீர்மானித்த மன்னர் தொண்டைமான், காடாக இருக்கும் இடங்கள் சிலவற்றை தேர்தெடுத்து அதனை ஒரு ஊராக உருவாக்க கட்டளையிட்டார். அதன்படி மல்லிகை செடிகள் அதிகம் காணப்பட்ட ஒரு இடத்தில் சீரமைக்கும் பணியில் அரசு பணியாளர்கள் செயல்பட்டு வந்தனர். அப்போது ஒரு இடத்தை தோண்டும் போது, பூமிக்குள் இருந்து […]

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு வேலையில்லாமல் சிவபெருமானுக்கு போர் அடித்தது. மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார். கண்களுக்குத் தெரியாத […]

கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகற்றும் தாமரை தீபம்

Written by Niranjana  மகாலஷ்மிக்கு யாகம் செய்யும் போது தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து யாகத்தில் போட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது. யாகங்கள் செய்ய இயலாதவர்கள், இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு நெய் தீபம் ஏற்றி வைத்து மகாலஷ்மிக்குரிய மந்திரத்தை உச்சரித்தால், ஸ்ரீ மகாலஷ்மி ஆனந்தம் அடைந்து, சகல பாக்கியங்களையும் கொடுப்பாள். யாகத்தில் தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து போட்டாலும் அல்லது இரண்டு அகல் விளக்குகளில் தாமரை தண்டு திரியை போட்டு […]

வேண்டுதலை நிறைவேற்றும் சிங்கீஸ்வரர்

செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் சாலையில் வாலாஜாபாத் அருகே அவளூர் என்ற இடத்தில் சிங்கீஸ்வரர் கோவில் அருமைந்துள்ளது. வாலாஜாபாத்தில் இருந்து மினி பஸ், ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. ஒரு முறை சிவபெருமான் பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபொழுது, “சிங்கி” என்று அழைக்கப்பட்ட நந்தி தேவர், அந்த ஆனந்த கூத்தனின் நடனத்திற்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்தார். அவ்வாறு மிருதங்கத்தை இசைத்துக் கொண்டிருந்த நந்தி தேவர் தொழில்மீது இருந்த பக்தியின் காரணமாக கண்ணை மூடிக்கொண்டு […]

வளம் தரும் கரிவரதராஜப்பெருமாள்

Written by Niranjana கரிவரதராஜப்பெருமாள் கோயில், ஆறகழூர் – சேலம் மாவட்டம். ஒருவருக்கு பண வசதி வந்துவிட்டால் பழைய நிலையை மறந்து புதிய வாழ்க்கைகேற்ப மாறுவார்கள். “நான் உனக்கு நிறைய உதவிகள் செய்தேன்” என்று சிலர் அந்த நபர்களிடம் சொன்னால், “உண்மைதான்” என்று மனம் ஒப்புக்கொண்டாலும் வாய் ஒப்புகொள்ளாது. இந்த மனநிலையில்தான் துரியோதனனும் இருந்தான். “நன்றி மறக்க கூடாது என்று என் மனம் சொன்னாலும், என் செயல்கள் நன்றி மறந்தவனாகவே அமைந்துவிடுகிறது” என்று வருந்தினானாம் துரியோதனன். மனம் […]

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by NIRANJANA நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்.   ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் […]

அருளும், பொருளும் தரும் ஈச்சனாரி விநாயகர்!

கோவையில் இருந்து பொள்ளாச்சி போகும் சாலையில்- சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில், ஈச்சனாரி என்னும் இடத்தில் இருக்கிறது இந்த ஈச்சனாரி விநாயகர் ஆலயம். இந்த கோயிலின் தலவரலாறு மிகவும் சுவையானது. கோவையில் புகழ்பெற்ற இன்னொரு கோயிலான பேரூர் பட்டீஸ்வரசாமி கோயிலுக்காக செய்யப்பட்ட விக்ரகம் இது. ஆறு அடி உயரம், மூன்று அடி பருமனும் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு மாட்டு வண்டியில் விக்ரகத்தை ஏற்றி வந்தனர். வண்டியின் அச்சு இப்போது கோயில் இருக்கும் இடத்திற்கு அருகே […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech