Stories written by Niranjana
28.04.2017 அன்று அட்சய திருதியை Written by Niranjana அட்சய திருதியை என்று சொன்னவுடன் இப்போது இருக்கும் அனைத்து மக்களுக்கும் நகை வாங்கும் நாளாகத்தான் மனதில் தோன்றும். ஆனால் அட்சய திருதியையின் உண்மையான காரணம் என்ன என்று புராணங்களை படித்து பார்த்தால், இந்த நன்நாளில் புண்ணியங்கள் செய்யும் நாளாக அனுசரிக்க வேண்டும் என்றுதான் இருக்கிறது. இந்த அட்சய திருதியை திருநாளில் புண்ணிய காரியங்கள் அதாவது, தான – தர்மங்களை சின்ன அளவில் செய்தால், அது பெரிய விஷயமாக அமைந்து, […]
Written by Niranjana 09.04.2017 அன்று பங்குனி உத்திரம். திருமணம் இறைவனால் நிச்சயிக்கப்படுகிறது என்பது எல்லோரும் சொல்லும் பொதுவான சொல்தான். ஆனால் தன் பிள்ளைகளுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு கவலையாகவே மாறிவிடுகிறது. அதிக திருமண நிகழ்ச்சிகளை பார்த்தால் திருமண யோகம் ஏற்படும் என்கிறது சாஸ்திரம். இப்படி மானிடர்களின் திருமணத்தை பார்த்தாலே யோகம் என்றால், தெய்வத்தின் திருமண கோலத்தை பார்த்தால் எத்தனையோ ஆனந்தங்கள் அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழும். அத்துடன் திருமணம் நடக்காதவர்களுக்கு விரைவில் திருமண […]
Written by Niranjana 05.04.2017 அன்று ஸ்ரீராம நவமி! பங்குனி மாதம் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் ஸ்ரீராமர் பிறந்தார் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணனின் ஸ்ரீ இராம அவதார திருநாளான இதனை ராம நவமியாக கொண்டாடுவது நம் வழக்கம். நல்லவர்களை உதாரணம் சொல்ல ஸ்ரீராமரைதான் குறிப்பிடுவார்கள். ஒரு தெய்வம் மனித ரூபமாக தோன்றி, ஒரு நல்ல மனிதனுக்கு இன்னல்கள் நேர்ந்தால் எவ்வாறு அவன் நிலை இருக்கும் என்பதற்கு தன்னையே ஒரு உதாரணம் ஆக்கியவர் ஸ்ரீஇராமபிரான். தந்தை […]
Written by Niranjana மத்திரத் தேசத்தின் அஸ்வபதி என்ற அரசனுக்கு மாளவி என்ற குணவதியான மனைவி இருந்தாள். “அரசன் என்ற பதவியை கொடுத்த இறைவனால், தந்தை என்ற பதவியை கொடுக்க முடியவில்லையே…“ என்ற கவலை அஸ்வபதி தம்பதினருக்கு வாட்டியது. தன் கவலையை நாரதர் முனிவரிடம் சொல்லி வருத்தபட்டார் அரசர். “கவலை வேண்டாம். இறைவன் உங்களுக்கு பெரும் செல்வமான குழந்தை செல்வத்தை தருவார். நீங்கள் சாவித்திரி தேவியை மனதால் நினைத்து விரதம் இருந்து யாகம் செய்யுங்கள்“ என்றார் நாரத […]
11.03.2017 அன்று மாசி மகம் Written by Niranjana மகம் என்றவுடன் அதன் சிறப்பை சொல்கிற சொல், “மகத்தில் பிறந்தவர்கள் ஜெகத்தை ஆள்வார்கள்” என்பதுதான். மக நட்சத்திரத்தை “பித்ருதேவதா நட்சத்திரம்” என்று அழைப்பார்கள். இந்த பித்ருதேவதாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியை தருகிறது. முன்னோர்கள் ஆத்மசாந்தியுடன் இருந்தால்தான் அவர்களுடைய வம்சம் சுபிக்ஷமாக இருக்கும். உலகத்தை இறைவன் உருவாக்குவதற்கு முன், பித்ருதேவனை உருவாக்கிய பிறகே தேவர்களையும், மனிதர்களையும் மற்ற ஜீவராசிகளையும் உருவாக்கினார் என்கிறது சாஸ்திரம். இதனால் முதல் மரியாதையானது மக […]
Written by Niranjana 27.01.2017 அன்று தை அமாவாசை தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பித்ரு கடனை சரியாக நிறைவேற்றினால் பல நன்மைகள் உண்டாகும் கடன் பட்ட நெஞ்சம் கலங்கும் என்பார்கள். அதுபோல பல வருடங்கள் பாடுபட்டு குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற […]
Written by Niranjana 14.01.2017 அன்று தைப் பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் […]
Written by Niranjana 28.12.2016 அன்று அனுமன்ஜெயந்தி ஆஞ்சனேயரை வணங்கினால் சனி பகவானால் உண்டாகும் கெடுதல் விலகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் இராகு – கேதுவால் உண்டாகும் சர்ப தோஷத்தையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா? கேசரி என்பவர் ஸுமேரு மலைக்கே ஆட்சி புரிந்து வந்தார். அவருடைய மகள் அஞ்சனா. வாயுபகவானுக்கும் அஞ்சனாவுக்கும் பிறந்தவர்தான் ஆஞ்சனேயர். ஒருநாள் வாயு புத்திரரான நம் அஞ்சனேயருக்கு மிகவும் பசி. ஏதாவது சாப்பிட வேண்டும் […]
Written by Niranjana ஒருவர் அதிக வசதியோடு இருந்தால், “அவனுக்கு என்னய்யா சுக்கிர திசை.“ என்பார்கள். அதுவே உடல் மெலிந்து கருத்து போய் வறுமை அடைந்தவரை பார்த்தால், “இது எல்லாம் ஏழரை சனியால் வந்த தொல்லை. சும்மா வாட்டி வதைக்கும் பாவம்.“ என்று கூறுவதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சனிஸ்வரர், மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே, ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு. காடாறு மாதம் நாடாறு மாதம் என்று இருந்தாலும் யாருக்கும் […]
Written by Niranjana நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். […]