Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

ஐயப்பன் சுவாமி வரலாறு பகுதி – 1

Written by Niranjana niranjana

எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. மகிஷாசுரனால் அவதிப்பட்ட தேவர்களை காக்க துர்கை அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்து தேவர்களுக்கு மகிழ்சியை நிம்மதியை தந்தார். “மகிஷாசுரன் மரணம் அடைந்ததால் தேவர்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள். தேவர்களின் மகிழ்ச்சியை அழிப்பேன்.” என்று கங்கனம் கட்டினாள் மகிஷாசுரனின் தங்கை மகிஷி.

அதனால் பிரம்மனை நினைத்து தவம் செய்தாள்.

மகிஷியின் தவத்தை ஏற்று பிரம்மன் காட்சி கொடுத்தார். தமக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்கிற வரம் கேட்டாள் மகிஷி.

“படைக்கப்படுவது யாவும் ஒருநாள் அழியக் கூடியதே. ஆகவே மரணம் இல்லா வாழ்க்கை என்பது ஹரியும் ஹரனும் கூட தர முடியாத வரம்.“ என்றார் பிரம்மன்

“ஒ.. அப்படியா. சரி. அந்த ஹரி-ஹரனால் எனக்கு மரணம் நேரக்கூடாது. அத்தகைய வரம் வேண்டும்” என்றாள் மகிஷி.

“அப்படியே ஆகட்டும்” என்று வரம் தந்து மறைந்தார் பிரம்மன்.

மகிஷியால் நமக்கு கிடைத்த தெய்வம்

Bhakthi Planetமகிஷி தன் கண்களுக்கு தென்பட்டவர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினாள். தேவர்களும் முனிவர்களும் பூலோகவாசிகளும் மகிஷியால் அவதிப்பட்டார்கள்.

மகிஷியால் மட்டுமல்லாமல், இனி பிறக்கப் போகும்  அசுரர்களாலும் தங்களுக்கு தொந்தரவு நேரக்கூடாது. அசுரர்களை விட பலசாலிகளாக திகழ வேண்டும் என்று எண்ணி தேவர்கள் பாற்கடலைக் கடைந்து அமுததை பெற முயற்ச்சித்தார்கள்.

தேவர்களின் திட்டம் தெரிந்த அசுரர்கள், “நாங்களும் பாற்கடலை கடைவோம்.” என்று கூறி, தேவர்களுடன் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்தார்கள். ஏற்கனவே பலசாலிகளான அசுரர்கள் அமுதத்தை உண்டால், மேலும் தேவலோகத்திற்கும் பூலோக மக்களுக்கும் ஆபத்து நேரும். அத்துடன் மகிஷியையும் அழிக்க முடியாது என்று பயந்து மகாவிஷ்ணுவிடமும் சிவபெருமானிடமும் முறையிட்டார்கள் தேவர்கள்.

இதனால் மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து, தேவர்களுக்கு அமுதத்தை பங்கிட்டு கொடுத்தார். விஷ்ணுபகவான் மோகினி அவதாரம் எடுத்து  தேவர்களை காத்தார். அதனால், “சிவனும் –  மோகினி அவதாரத்தில் இருக்கின்ற விஷ்ணுவும் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்கினால், அந்த குழந்தையால் எத்தனை யுகம் வந்தாலும் நல்லவர்கள் காக்கப்படுவார்கள். மகிஷியையும் அந்த சக்திவாய்ந்த குழந்தை கொல்லும்” என்று தேவர்களின் விருப்பத்தை ஏற்று, பூலோக மக்களை காக்கவும் மகிஷியை அழிக்கவும் ஒரு குழந்தையை உண்டாக்கி பூலோகத்தில் அவதாரம் செய்ய வைத்தார்கள் சிவபெருமானும் விஷ்ணு பகவானும்.

அந்த குழந்தைதான் “சாஸ்தா”.

சாஸ்தாவுக்கு கோவில் கட்டி பூஜித்து வந்தார்கள் பூலோக மக்கள்.

ஐயப்பன் தோன்றிய கதை   

உதயன் என்பவன் கேரளாவில் உள்ள சாஸ்தாவின் கோவிலில் இருந்து மூலவிக்கிரகத்தை கொள்ளையடித்து  கோவிலையும் நாசப்படுத்தினான். அத்துடன் அந்நாட்டின் அரசரின் மகளையும் கடத்தி ஒரு குகையில் அடைத்து வைத்தான்.Manamakkal Malai

சாஸ்தாவின் மூலவிக்கிரகத்தை மீட்டு மீண்டும் கோவிலில் வைக்க வேண்டும் என்று எண்ணினார் சேனன் என்ற ஜயந்தன். இவர் சாஸ்தா கோவில் பூசாரியின் மகன். அதனால் ஜயந்தன் பொன்னம்பல மேட்டில் தவம் செய்தார். ஜயந்தனின் கனவில் சாஸ்தா தோன்றி, “நீ முதலில் உதயன் பிடியில் இருக்கும் அரசியை மீட்டு திருமணம் செய்துக் கொள். உங்களுக்கு நானே மகனாக பிறப்பேன். பிறகு உன் விருப்பப்படி என் விக்கிரகத்தை நானே பிரதிஷ்டை செய்வேன்” என்று. சாஸ்தா கனவில் கூறினார்.

அதன்படி உதயனின் காவலில் இருந்த அரசகுமாரியை மீட்டு திருமணம் செய்து, ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்கள் இந்த தம்பதியினர். அந்த குழந்தையே ஐயப்பன்.

தெய்வ குழந்தையை கண்ட அரசர்

இறைவனின் விருப்பபடி எல்லாம் நடக்கும் என்ற சொல்லுக்கேற்ப ஒருநாள், பந்தள அரசரான ராஜேசேகரன் பம்பா நதியோரம் வேட்டையாட வந்தார். அப்போது ஒரு குழந்தையின் அழும் குரல் கேட்டது. குரல் வரும் திசையின் வழியாக சென்று பார்த்த போது அழகு குழந்தையான ஐயப்பன் தெய்வகலையுடன் இருந்தது. அந்த குழந்தையை தன் கையில் தூக்கினார் அரசர் ராஜசேகரன்.

தன் கையில் எடுத்த அடுத்த வினாடியே அந்த குழந்தை அழுவதை விட்டுவிட்டு அதன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. குழந்தை பாக்கியம் இல்லாத அரசர், குழந்தையின் புன்னகையில் நெகிழ்ந்து போனார். குழந்தையை தானே வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். சாஸ்தாவின் அவதாரமான குழந்தை ஐயப்பன், தன்னிடம் வளருவதைவிட அரசரின் மகனாக வளர்ந்தால், சாஸ்தாவின் அவதார நோக்கம் நிறைவேறும் என்று எண்ணி அரசருடன் குழந்தையை அனுப்பி வைக்க சம்மதித்தார். பந்தள அரசரும் குழந்தையை தன் அரண்மனைக்கு எடுத்து சென்று அரசியிடம் தந்தார்.

greensiteகுழந்தையின் கழுத்தில் மணியோடு இறைவன் கொடுத்ததால் “மணிகண்டன்” என்ற பெயர் வைத்தார்கள். அத்துடன் தங்களுக்கு குழந்தை இல்லா கவலையை போக்கி, நாட்டுக்கு வாரிசு இல்லாத நிலை என்ற ஐயத்தை போக்கியதால் “ஐயப்பன்” என்ற பெயரும் சரியாகவே இருக்கும் என்பதால் “ஐயப்பன்” என்றும் அழைத்தார்கள்.

அரசரும் அரசியும், குழந்தை ஐயப்பனின் மீது அதிக பாசத்தை காட்டினார்கள். தெய்வ அருளால் சில நாட்களிலேயே அரசி கருவுற்றாள்.

அரசிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு “இராஜராஜன்” என்று பெயர் வைத்தார்கள். ஐயப்பனும் தன் தம்பி இராஜராஜனின் மேல் அதிக பாசமாக இருந்தார்.

நாட்கள் ஒடியது. மாதங்கள் ஆனது. மாதங்களும் ஓடி, வருடங்கள் ஆனது. சிறுவர்களாக இருந்த அண்ணன் ஐயப்பனும், தம்பி இராஜராஜனும் இப்போது இளைஞர்கள்.

தத்து பிள்ளையாக இருந்தாலும் ஐயப்பனை தங்கள் மூத்த மகனாக இருப்பதால் அரசர் ராஜசேகரன், மணிகண்டனுக்கு முடிசூட்ட விரும்பினார்.

இராமரின் பட்டாபிஷேகத்தை நிறுத்த கூனி இருந்தது போல, ஐயப்பனின் பட்டாபிஷேகத்தை தடுத்து நிறுத்த ஒரு பொறாமைகார மந்திரி இருந்தான். ஐயப்பன் அரசராக ஆகிவிடுவாரோ என்று எண்ணி ஆரம்பத்தில் இருந்தே பல சதிகளை செய்து வந்தான். ஐயப்பனுக்கு மறைமுகமாக பல இன்னல்களை கொடுத்தான். ஒவ்வொரு சமயமும் சிவபெருமானும், ஸ்ரீமகாவிஷ்ணுவும் மணிகண்டனை காப்பாற்றி வந்தார்கள்.

தம்முடைய ஒவ்வொரு சதி திட்டங்களில் இருந்தும் ஐயப்பன் எப்படியாவது தப்பித்துவிடுவதை கண்டு கொலை வெறியில் இருந்த மந்திரி, இனி தனி ஆளாக இருந்து ஐயப்பனை வெல்ல முடியாது என்று எண்ணி, தன் சதிக்கு அரசியையும் கூட்டு சேர்த்துக் கொள்ளவேண்டும் என திட்டமிட்டான்.

அரசியிடம் பக்குவமாக பேசி மணிகண்டனை நாடாளவிடாமல் தடுக்கலாம் என்று முடி செய்தான்.

உலகை ஆள பிறந்த ஐயப்பனை நாடாளவிடாமல் தடுப்பதால் என்ன பயன்?

தீயவர்களின் திட்டம் நல்லவர்களுக்கு சிம்மாசனத்தையே தரும்.

மந்திரியின் தீய திட்டம், நம் ஐயப்பனுக்கு அது புலியாசனத்தை தந்தது.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »