Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

திருப்பங்கள் தரும் திருப்பதி கங்கையம்மன் சென்னை

Written by Niranjana niranjana

சென்னை பெசன்ட் நகர் வண்ணாந்துயில் உள்ள அருள்மிகு திருப்பதி கங்கையம்மன் திருக்கோயில்.

பெற்ற குழந்தையை காப்பாற்ற பெற்றோர்களுக்கு எத்தனை கடமையும், அன்பும் இருக்கிறதோ அதுபோல் நம்மை படைத்த இறைவனுக்கும் அத்தகைய கடமையும் அன்பும் இருக்கிறது. ஒரு அரசாங்கத்தை ஒழிக என்று சிறையில் இருந்துக்கொண்டே கோஷம் எழுப்பினாலும், அந்த கைதி தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அரசாங்கம் உணவு தந்து பாதுகாக்கும். அதுபோல்தான் இறைவன். தெய்வம் இருக்கிறது என்றாலும், இல்லை என்றாலும், தெய்வம் கவலைப்படுவதில்லை. தாம் படைத்த எல்லா ஜீவராசிகளையும் சமமாகவே எண்ணுகிறார். மனிதர்கள்தான் செய்யக்கூடாத காரியங்களை செய்து, சேரக் கூடாத துஷ்டர்களுடன் சேர்ந்து அவதிக்கு ஆளாகிறார்கள். தாயின் கரத்தை பாதுகாப்பு என்றெண்ணி கெட்டியாக பிடித்தபடி நடக்கும் குழந்தையை போல தெய்வத்தை உறுதியாக நம்பி நடந்தால் தெய்வம் துணை இருக்கும்.

அவ்வாறு நமக்கு துணையிருக்கும் தெய்வம்தான் சென்னையில் உள்ள திருப்பதி கங்கையம்மன்.

திருப்பதி கங்கை அம்மன் சென்னைக்கு வந்தார் 

Bhakthi Planetசென்னை மக்கள் திருமலையை தரிசிக்க திருப்பதிக்கு சென்றார்கள். அந்த காலத்திலெல்லாம் நினைத்தவுடன் திருப்பதிக்கு சென்று வர முடியாது. போக்குவரத்து வசதி இல்லாததால் பயணத்துக்கே பல நாட்கள் ஆகும்.

ஒருசமயம் சென்னை பக்தர்கள், ஒரு குழுவாக சேர்ந்து சென்னையில் இருந்து திருப்பதிக்கு நடைபயணத்தை தொடங்கினார்கள்.

திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாளை மனதார தரிசனம்  செய்தார்கள். திருப்பதியில் அந்த நாளில் கூட்டம் இல்லாததால் “ஜெருகண்டி  ஜெருகண்டி”” என்ற தொல்லை இல்லை. அதனால் நிம்மதியாகவும் திருப்தியாகவும் பெருமாளை தரிசித்தார்கள் சென்னை பக்தர்கள். மறுநாள் கிளம்பினால் சென்னைக்கு போய் சேர சரியாக இருக்கும் என்று முடிவு செய்தார்கள். அதனால் திருப்பதியில் ஒரு பெரிய மரத்தின் அடியில் இரவு தங்கி, மறுநாள் பயணத்தை தொடங்க முடிவு செய்து அந்த மரத்தின் கீழே எல்லோரும் உறங்கினார்கள்.

அந்த பக்தர்கள் குழுவில் இருந்த ஒருவரின் கனவில் அம்மன் தோன்றி, “நீங்கள் போகும் பாதையில் நான் களிமண் சிலை வடிவில் இருக்கிறேன். நீங்கள் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்” என்று ஒருவரின் கனவில் அம்மன் கூறி மறைந்தார். தாம் கண்ட கனவை மற்றவர்களிடம் கூறினார் அந்த பக்தர்.

“இருட்டில் ஏதாவது மிருகம் வருமோ, பேய் வருமோ என்று பயத்திலேயே இறைவனை நினைத்து உறங்கி இருப்பாய். அதனால்தான் உன் கனவில் அம்மன் தோன்றியது போல் கனவு கண்டாய். இது சாதாரணமாக வரும் கனவுதான்.“ என்று உடன் இருந்தவர்கள் அந்த பக்தர் சொன்ன கனவை நம்ப மறுத்தார்கள். அவர்கள் கூறியதை கேட்ட அந்த பக்தரும், இவர்கள் சொல்வது போலதான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டார். மறுநாள் சென்னையை நோக்கி நடைபயணத்தை தொடங்கினார்கள்.

கனவில் கண்ட சிலை

பயணம் தொடர்ந்தது. வழியில் பெரும் அதிசயமாக கொஞ்சம்Manamakkal Malai தூரத்தில் ஒரு சிலை இருப்பதை பார்த்து அதன் அருகில் சென்றார்கள். அது, முந்தைய தினம் பக்தரின் கனவில் வந்த அதே களிமண் சிலை. “பார்த்தீர்களா… என் கனவில் வந்தது இந்த சிலைதான்.” என்ற மிக மகிழ்ச்சியுடன் அந்த பக்தர் கூறினார். உடன் வந்தவர்களுக்கும் இது ஆச்சரியமாகவே இருந்தது.

“ஆமாம். நீ சொன்னது உண்மைதான். நாம் தெய்வத்தை தேடி வந்தோம். ஆனால் தெய்வம் நம்மை தேடி வந்திருக்கிறது. நமக்கு நன்மை செய்யவே வந்திருக்கிறார் அன்னை” என்று கூறினார்கள். களிமண்ணால் உருவாக்கப்பட்ட அம்மன் சிலையை தன் இருகரங்களால் பயபக்தியுடன் தாங்கி எடுத்துக் கொண்டார் அந்த பக்தர்.

திருப்பதி கங்கையம்மன்

அம்மன் சிலையுடன் தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள்.

சிறிது தூரம் வந்த பிறகு அவர்களின் எதிரில் ஒரு பெரியவர் வந்துக் கொண்டிருந்தார். களிமண்ணால் ஆன அம்மன் சிலையை பக்தர்கள் கையில் ஏந்தி வந்துக் கொண்டிருப்பதை கண்டு அருகில் வந்து பேசினார்.

greensite“இது வெறும் களிமண்ணால் ஆன அம்மன் சிலையாக தோன்றவில்லை. அந்த அம்மனே உங்கள் கரத்தில் அமர்ந்திருப்பது போல இருக்கிறது. இந்த அம்மனை எங்கே பிரதிஷ்டை செய்ய போகிறீர்கள்.?” எனக் கேட்டார் அந்த பெரியவர். சென்னை பக்தர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, தங்களில் ஒரு பக்தரின் கனவில் இந்த அம்மன் தோன்றிய சம்பவத்தை விவரித்தார்கள்.

திருப்பதி யாத்திரை முடிந்து சென்னைக்கு திரும்புவதாகவும் சொன்னார்கள் பக்தர்கள். இவற்றையெல்லாம் கேட்ட அந்த பெரியவர் மகிழ்ந்தார். தன்னை பற்றியும் சொன்னார்.

“மகிழச்சி. நானும் புனித யாத்திரையாக பல ஸ்தலங்களை தரிசித்துவிட்டு கங்கையில் புனித நீராடி வருகிறேன். என்னிடம் கங்கை தீர்த்தம் இருக்கிறது. நீங்கள் உங்கள் ஊரில் இந்த அம்மனை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்யும்போது நான் தரும் கங்கை தீர்த்தத்தை பயன்படுத்தினால் மிக சிறப்பாக இருக்கும். செய்வீர்களா.?” என்றார் அந்த பெரியவர்.

“அப்படியே செய்கிறோம்.” என்ற சென்னை பக்தர்கள், பெரியவரிடம் இருந்து கங்கை தீர்த்தத்தை பெற்றுக் கொண்டார்கள்.

சென்னை பெசன்ட் நகர்

சென்னைக்கு வந்தவுடன் அம்மனுக்கு எங்கே கோவில் கட்டலாம்niranjana channel என்று சிந்தித்தபோது அமைதியான இடமாக இருந்த பெசன்ட் நகரை தேர்தெடுத்து கோவில் கட்டி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். திருப்பதியில் இருந்து அம்மன் வந்ததாலும் வரும்போதே கங்கை தீர்த்தத்தோடு வந்ததாலும் இந்த அம்மனுக்கு, “திருப்பதி கங்கையம்மன் என்று பெயர் சூட்டினார்கள்.

திருப்பதியிலிருந்து கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை மண்ணால் ஆனது என்பதால், சில வருடங்களுக்கு பிறகு அம்மனை பூமிக்குள் பிரதிஷ்டை செய்துவிட்டு அதற்கு மேலே கங்கையம்மனின் புதிய சிலையை பிரதிஷ்டை செய்தார்கள். அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி என்ற பெயரும் உள்ளது.

திருப்பதி கங்கையம்மனை நம்பிக்கையுடன் வணங்கினால் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பக்தர்களும் நல்ல திருப்பங்களை பெற்று தங்கள் அனுபவத்தில் உணர்ந்து சொல்கிறார்கள்.

மச்ச பலன்கள் கிளிக் செய்யவும் 

Guru Peyarchi 2015-2016 All Rasi Palan Click Here 

2015 New Year Rasi Palan All Rasi Palan Click Here 

SANI PEYARCHI 2014 TO 2017 RASI PALANCLICK HERE

இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்

ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்

வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும் 

ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும் 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

http://www.youtube.com/bhakthiplanet

http://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2015 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Sep 18 2015. Filed under Headlines, அம்மன் கோயில், ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »