கல்வி ஞானம் தரும் வடிவுடையம்மன்
சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர் தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் படையை ஏவி கருகி கிடந்த அம்பாளின் உடலை பல துண்டுகளாக வெட்டினார். சக்தியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் ஒன்றுதான் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.
பாண்டியனின் ஆட்சியின் போது தன் கணவருக்கு அநீதியாக தீர்ப்பு வழங்கியதை தெரிந்து மதுரையை எரித்துவிட்டு மதுரையை ஆட்சி செய்யும் மீனாட்சியிடம் தனக்கு ஏற்பட்ட துன்பத்துக்கு நியாயம் கேட்க மீனாட்சி அம்மன் எங்கு இருக்கிறார் என்று தேடி கொண்டே திருவொற்றியூருக்கு வந்துவிட்டாள் கண்ணகி. அங்கு சிவபெருமானும் அம்பிகையும் தாயக்கட்டாம் விளையாடி கொண்டு இருந்தார்கள். அப்போது கண்ணகி ஆவேசமாக அம்மனை நோக்கி நெருங்கி வருவதை சிவபெருமான் பார்த்தார். மதுரையை எரித்தது போல் காளியின் ரூபமான கண்ணகி நம் திருவொற்றியூரையும் எரித்துவிடுவாளோ என்ற எண்ணத்தில் ஈசன் சட்டென்று, விளையாடி கொண்டு இருக்கும் தாயகட்டையை கிணற்றில் கை நழுவிவிடுவது போல் கிணற்றில் போட்டார். இதை கண்ட கண்ணகி ஏதோ அவசரத்தில் கிணற்றில் குதித்தாள். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணிய தியாகராசர், அந்த கிணற்றை வட்டமாக இருந்த பாறையை எடுத்து மூடினார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் திருவொற்றியூர் வந்த கண்ணகிக்கு வட்டபாறை அம்மன் என்று பெயர் வந்தது.
கம்பருக்கு தீப்பந்தம் பிடித்த வட்டபாறை அம்மன்
ஒரு சமயம் கம்பர் சதுரானை பண்டிதர் மூலம் இராமாயணம் கேட்ட பிறகு அதை தமிழில் எழுத சிறந்த இடத்தை தேடினார். அப்போது அவர் மனதில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் நினைவுக்கு வந்தது. அங்கு இருக்கும் வட்டப்பாறை அம்மன் கருவறைக்கு சென்று இராமாயண காவியத்தை எழுத தொடங்கினார். வெளிச்சம் சரியாக இல்லாததால் கம்பரால் எழுத முடியவில்லை. அதனால்
“ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே
நந்தாது எழுதுதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி”
என்று பாடினார். இதை கேட்ட காளியும் கம்பரின் பேச்சை தட்டாமல் அவர் இராமாயண காவியம் எழுதி முடிக்கும் வரை கம்பரின் அருகிலேயே தீ பந்தத்தை பிடித்து கொண்டு நின்றாள் காளி அம்மன்.
காளியின் சினத்தை குறைத்த ஸ்ரீ ஆதிசங்கரர்
காளி தேவியின் சினம் அதிகமானாது. இதனால் ஊருக்குள் பல பிரச்சினைகள் அதிகமானது. அதனால் ஊர் மக்கள் காளியின் சினம் தவிர்க்க ஆடு, கோழி என்று பலி கொடுத்து வந்தார்கள். இதை விரும்பாத ஸ்ரீ ஆதிசங்கரர் தேவியின் உக்கிரத்தை தணிக்க அவள் சன்னதி எதிரே ஒரு ஸ்ரீசக்கரம் நிறுவினார். இதனால் காளியின் சினம் தனிந்தது. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு துணையிருந்து விரோதிகளிடமிருந்து காப்பாற்றுகிறாள் வட்டபாறை அம்மன்.
சிறுவனின் பசியை போக்கி அந்த சிறுவனை உலக புகழ் பெற செய்தாள் வடிவுடையம்மன்.
இராமலிங்கம் என்ற சிறுவன். தினமும் வடிவுடைஅம்மன் கோயிலுக்கு சென்று பல மணி நேரம் அன்னையை பார்த்து கொண்டே இருப்பான். அவனுக்கு பக்தியில் இருந்த கவனம் படிப்பில் இல்லை
ஒருநாள் இரவு கோயிலிலேயே அதிக நேரம் பொழுதை களித்தான். நடு இரவில் வீடு வந்து சேர்ந்தான். வீட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. இராமலிங்கத்திற்கு நல்ல பசி. இந்த இரவில் கதவை தட்டினால் அண்ணி திட்டுவாரே, அவர்களுக்கு ஏன் சிரமம் தர வேண்டும் என்று தின்னையிலேயே பசியோடு படுத்தான். அப்போது,
“ராமலிங்கம் எழுந்திரு. சாப்பிடலாம்” என்று அவன் அண்ணி தட்டி எழுப்பி வாழை இலையில் உணவு பரிமாறினாள். பிறகு அந்த தின்னையிலேயே மீண்டும் தூங்கிவிட்டான் இராமலிங்கம். சில மணி நேரம் கழித்து யாரோ இராமலிங்கத்தை தட்டி எழுப்ப விழித்தான். அண்ணிதான் நின்றிருந்தாள்.
“இராமலிங்கம் வெறும் வயிற்றில் தூங்காதே வந்து சாப்பிடு.” என்றாள்.
“இப்போதுதானே சாப்பாடு போட்டீர்கள். அதோ பாருங்கள் நான் சாப்பிட்ட இலை” என்றான்.
“இல்லை நான் சாப்பாடு போடவில்லை. ஆச்சரியமாக இருக்கிறதே. யார் உனக்கு உணவு தந்தது.” என்றாள் அண்ணி. அண்ணியாக வந்தது திருவொற்றியூர் வடிவுடையம்மன் என்பதை உணர்ந்தான். அன்னை தந்த உணவு சிறுவனுக்கு பெரும் ஞானத்தையும் தமிழ் புலமையை தந்தது. இராமலிங்க வள்ளலார் எனும் புகழை தந்தது.
ஞானசக்தியான வடிவுடை அம்மனை வணங்கினால் ஞானம் பெறுவர். கல்வியில் புகழ் அடைவார்கள். கம்பனை உயர்த்திய வட்டபாறை அம்மன் நம்மையும் உயர்த்துவாள்.
ஏற்றத்தை தரும் திருவுடையம்மன்.
கொடியிடை அம்மன் ஆசியுடன் போரில் வெற்றி கண்ட தொண்டைமான்.
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104