எளிதில் இவர்களுக்கு சொந்த வீடு | Your Horoscope Says You’ll Own a House Easily
வேத ஜோதிடத்தில் சில கிரக அமைப்புகள் ஒருவருக்கு எளிதில் சொந்த வீடு, நிலம் மற்றும் சொத்து கிடைக்கும் யோகத்தை வழங்குகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று, லக்கினத்திற்கு 6-ம் அதிபதி 9-ம் இடத்தில் அமைந்து, அவருடன் 2-ம் அதிபதியும் இணைவதாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு வீடு வாங்கும் வாய்ப்புகள் எளிதாக அமையும்.
2-ம் இடம் என்பது தனம், சேமிப்பு, குடும்ப செல்வம் ஆகியவற்றைக் குறிக்கிறது. 9-ம் இடம் பாக்கியம், தெய்வ அருள், அதிர்ஷ்டம் மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தை குறிக்கிறது. இவ்விரு அமைப்புகளும் இணையும் போது, சொத்து சம்பந்தமான தடைகள் குறைந்து, சொந்த வீடு அமைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும், இந்த கிரகங்கள் 10-ம் இடம் அல்லது 11-ம் இடத்தில் அமைந்தாலும் இதே சிறப்பு உண்டு. 10-ம் இடம் தொழில், புகழ் மற்றும் உயர்வை குறிக்கிறது. 11-ம் இடம் லாபம், வருமானம் மற்றும் ஆசை நிறைவேற்றத்தை குறிக்கிறது. இதனால் நல்ல வருமானம் உருவாகி, வீடு வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
ஆனால், ஜாதகத்தில் இந்த யோகம் இருப்பது மட்டும் போதாது. சரியான காலமும் அமைய வேண்டும். குறிப்பாக பாக்கியாதிபதி அல்லது தனாதிபதியின் தசா, புக்தி அல்லது அந்தரம் நடைபெறும் காலத்தில் சொந்த வீடு அமையும் வாய்ப்பு அதிகமாகும்.
எனவே, வீடு சம்பந்தமான பலனை பார்க்கும்போது கிரக அமைப்புகளுடன் காலநிலையையும் கவனமாக ஆராய வேண்டும். நல்ல யோகம் மற்றும் சரியான காலம் இணைந்தால், சொந்த வீடு கனவு நிச்சயமாக நனவாகும்.
In Vedic astrology, certain planetary combinations strongly indicate the possibility of owning a house, land, or valuable property with relative ease. One such important yoga occurs when the lord of the 6th house is placed in the 9th house and joins the lord of the 2nd house. This combination can bless the native with opportunities to acquire a home without major struggle.
The 2nd house represents accumulated wealth, family assets, and financial stability, while the 9th house signifies fortune, blessings, destiny, and divine support. When the 6th lord connects with these houses positively, obstacles related to property matters can gradually reduce, allowing the native to fulfill the dream of owning a house.
This special yoga also becomes effective when these planetary lords are positioned in the 10th house or the 11th house. The 10th house relates to career, status, and achievements, whereas the 11th house signifies gains, profits, and fulfillment of desires. Such placements often help the native earn sufficient wealth and support to purchase property successfully.
However, merely having this yoga in the horoscope is not enough. The timing of events plays a major role in astrology. The native may experience house ownership during the Dasha, Bhukti, or Antara of the 9th lord (Bhagya Adhipathi) or the 2nd lord (Dhana Adhipathi). During these planetary periods, fortune and financial growth become active, increasing the chances of purchasing a home or property.
Therefore, while analyzing a horoscope for property matters, astrologers must carefully examine both the planetary combinations and the operating Dasha periods. When favorable combinations and proper timing unite, the dream of owning a beautiful home can become a reality.
ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…
எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.
Send your feedback to: editor@bhakthiplanet.com
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation CLICK Here
© 2011-2026 bhakthiplanet.com All Rights Reserved







