Thursday 23rd April 2026

தலைப்புச் செய்தி :

பூஜை அறைக்கு பின்னால் பாத்ரூம் இருக்கலாமா? | Can a Bathroom Be Behind the Pooja Room? Vastu Truth Revealed!

ஜி. விஜய் கிருஷ்ணாராவ்
வாஸ்து நிபுணர்

       உலகில் மதம் எதுவாக இருந்தாலும் இறைவனை வழிபடுவது என்கின்ற விஷயம் பொதுவானதாகவே இருக்கும். இறை நம்பிக்கை இல்லாதவர்கள் கூட அவர்களின் குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் வீட்டில் பூஜை அறை அமைத்து இருப்பதை நாம் பார்த்து இருக்கிறோம். தினந்தோறும் ஆலய வழிபாடு என்பது நமது சமயத்தில் இருக்கும் மரபு. ஆனால் இன்றைய சூழ்நிலையில் பலரும் பலவித பிரச்சனைகளின் இருக்கும் காலகட்டமாகவே இருப்பதால், தினந்தோறும் கோயில் வழிபாடு என்பது இயலாத காரியமாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு மாற்றாகதான், வீட்டில் பூஜை அறை என்கின்ற அமைப்பு உருவானது. இது நமது சைவ வைணவ சமயத்தில் முதலில் தொடங்கி, பின்னர் எல்லா மதத்தினர் மத்தியில் ஒரு மரபாகவே உருவாகிப் போனது.

இந்த நேரத்தில் தனி வீடு கட்டுபவர்கள்,வீட்டில் பூஜை அறைக்கு என்று தனி இடத்தை தேர்வு செய்து அமைப்பார்கள். இன்றைய அடுக்குமாடி குடியிருப்பு கலாச்சாரத்தில், வசதி உள்ளவர்கள் பூஜைக்கு என்று ஒரு அறையையும், அதற்கு உண்டான வாய்ப்பு இல்லாதவர்கள் அதாவது இட வசதி குறைவாக உள்ளவர்கள், வரவேற்பறையில் ஒரு அலமாரியிலோ அல்லது சமையலறையில் ஒரு அலமாரியிலோ பூஜைக்கு என்று ஒரு இடமாக அமைத்துக் கொள்கிறார்கள்.

தனி பூஜை அறை நல்லதா? அல்லது இப்படி சின்ன அலமாரியில் பூஜைக்கு என்று ஒதுக்குவது நல்லதா? என்கின்ற கேள்வி தேவையற்றது. பூஜை அறை எவ்வாறு இருப்பினும் நல்லது என்பதே சரி.

இதில் இப்பொழுது உள்ள பெரும்பாலானவர்களுக்கு சந்தேகம் என்னவென்றால், பூஜை அறை அல்லது பூஜை அலமாரிக்கு பின்னால் பாத்ரூம் டாய்லெட் அதாவது கழிவறை குளியலறை இருக்கலாமா? என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. 

சிலர் பூஜை அறைக்கு பின்னால் பாத்ரூம் டாய்லெட் இருக்கக் கூடாது என்கிறார்கள்.



உண்மையில் சொல்லப் போனால் இந்த குழப்பம் தேவையற்றது. 

பூஜை அறைக்கு பின்னால் கழிவறை குளியலறை அதாவது பாத்ரூம் டாய்லெட் இருக்கலாம். இதில் எந்தவித வாஸ்து தோஷமும் சிறிதளவும் கிடையவே கிடையாது.

ஒரு வீட்டில் பூஜைக்கு என்று ஒரு அறை அல்லது ஒரு சின்ன இடம் கூட இல்லாமல் இருப்பதுதான் தவறு, வாஸ்து தோஷமே தவிர, பூஜைக்கு உள்ள பகுதிக்கு பின்னால் பாத்ரூம் டாய்லெட் இருப்பது எந்த விதத்திலும் தோஷமே கிடையாது. 

அதனால் உங்கள் வீட்டில் பூஜை அறை அல்லது பூஜைக்கு என்று உள்ள பகுதியில் பாத்ரூம் டாய்லெட் அமைந்து இருந்தாலும் அல்லது இனி அமைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலோ எந்த பயமும் தயக்கமும் இன்றி இருங்கள். இதனால் எந்த வாஸ்து தோஷமும் உறுதியாக ஏற்படாது. உங்கள் வீடு சிறிய அளவில் இருந்தாலும், பெரிய இடமாக இருந்தாலும், பூஜைக்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கி, பக்தியுடன் வழிபடுங்கள். அதுவே போதும். உங்கள் வாழ்க்கை வளமுடன் அமையும். 

நான் எத்தனையோ அன்பர்களுக்கு வாஸ்து பார்த்து வருகிறேன். அதில் பலரின் வீட்டில் பூஜை அறைக்குப் பின்னால் அல்லது பூஜை அலமாரிக்கு பின்னால் பாத்ரூம் டாய்லெட் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் செல்வமும், செல்வாக்கும் பெற்று மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வருகிறார்கள். சில வீடுகளில் பூஜை அறைக்கு பின்னால் பாத்ரூம் அல்லது டாய்லெட் என்று எதுவும் இல்லை. ஆனால் வாழ்க்கை பெரும் சிக்கல், போராட்டமாகவே இருக்கிறது. 

அதற்குக் காரணம், அமையக்கூடாத இடத்தில் அமைந்துவிட்ட பூஜை அறை.

வரும் சந்தர்ப்பத்தில், பூஜை அறை எந்த இடத்தில் அமைக்கக்கூடாது? என்பதை பற்றி சொல்கிறேன். 

நன்றி வணக்கம். 

நமசிவாய

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

For Astrology Consultation Mail to: bhakthiplanet[at]gmail[dot]com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

For Vastu Consultation Contact: G. Vijay Krishnarau, Phone Number: 98406 75946, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2026 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Apr 6 2026. Filed under Headlines, Home Page special, Vaasthu, Vaasthu, கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »