Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா? | கிரக பிரவேச நுட்பங்கள் Part 3

G.Vijay Krishnarau

வாஸ்து நிபுணர் / Vastu Expert

முந்தைய பகுதிக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்

வியாழக் கிழமை கிரகப்பிரவேசத்திற்கு நல்லதா?

வியாழன் என்றால் குரு பகவானுக்கு உரிய கிழமை. குரு நல்லவர்தானே என்று நினைக்கலாம். குரு நல்லவர்தான். ஆனால் அனைவருக்கும் அல்ல. மனையடி சாஸ்திரத்தில் வாஸ்து என்று ஒருவரை குறிப்பிடுகிது. வாஸ்து என்பவர் ஓர் அசுரர். அதிலும் குறிப்பிட்ட காலங்களுக்கு தூக்கத்தில் இருக்கும் ஒரு அசுரர். தேவர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள். அவர் எந்த நேரமும் விழித்திருந்தால் பூமிக்கு நல்லதல்ல என்று, அதிக தூக்கத்தை ஒரு வரமாக (சாபம் அல்ல) பெற்றார். குரு பகவான் (வியாழ கிழமைக்கு உரியவர்) தேவர்களின் தலைவர். அதனால் கிரகப்கிரவேச நிகழ்ச்சி என்கிற வாஸ்து பூஜை, வாஸ்து பரிகார நாட்கள் வியாழன் உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. இதில் சிலர், வாஸ்து நாளில்தான் பூமி பூஜை செய்ய வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்து வாஸ்து நாளில் கட்டடத்திற்கான பூமி பூஜை செய்வார்கள். அவர்களுக்கு வியாழக்கிழமை கிரகப்பிரவேசம் உகந்ததல்ல. என்னிடம் கிரகப் பிரவேசத்திற்கு நாள் குறிக்க வருபவர்களிடம் இந்த விஷயத்தை கேட்பேன். அவர்கள் வாஸ்து நாளில் பூமி பூஜை செய்ததாக சொன்னால், வியாழக்கிழமை கிரகப் பிரவேசத்திற்கு உரிய நாளாக குறித்து தர மாட்டேன்.

கிரகப் பிரவேசம் சிறந்த கிழமைகள்

ஒரு குடும்பத்தின் கனவு நிறைவேறிய பாக்கியமான நாளின் முக்கிய முதல்நாள் கிரகப் பிரவேசம் என்கிற புதுமனை புகுவிழா நாள்தான். அந்த வீட்டில் உங்களுக்கு நிகழப் போவது நன்மையா? தீமையா? என்று தீர்மானிக்கிற தினம்தான் கிரகப் பிரவேச நாள். திங்கட் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகியன கிரகப் பிரவேசத்திற்கு சிறப்பான கிழமைகளாக இருக்கிறது. இந்த மூன்று கிழமைகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து, உதயகாலத்தில் கிரகப் பிரவேசம் செய்தால் மிகவும் உத்தமம்.

கிரகப் பிரவேசத்திற்கு  ஆகாத நட்சத்திரங்கள்

கிரகப்பிரவேசம் செய்யக்கூடாத நட்சத்திரங்களாக அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, உத்திரம் மூன்று பாகங்கள், அனுஷம் மற்றும் திருவோணம் ஆகிய நட்சத்திரங்களாக இருக்கிறது. இவற்றை கிரகப்பிரவேசத்திற்கு மனையடி சாஸ்திரம் தவிர்க்கச் சொல்கிறது. அதுபோல, கிரகப்பிரவேசத்திற்கு நாட்குறிக்கின்ற தினமானது விருச்சிகம், கும்ப இராசிகளுக்குரியதாக இருந்தால், “இருத்தை“ என்பவளின் காலங்களாக கூறப்படும் சதுர்த்தி, சஷ்டி, நவமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய திதிகள் விருச்சிகம் அல்லது கும்ப தினங்களில் வந்தால், கிரகப்பிரவேசத்திற்கு நல்ல நாளாக இருக்காது என்று மனையடி சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

சூடாமணி உள்ளமுடையான் என்கிற நூல், சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகிய மூன்று திதிகளும் “இருத்தை காலம்“ என்று பேசுகிறது. ஆகவே விருச்சிக இராசி, கும்ப இராசி நாட்களில் மேற்கண்ட இருத்தை திதிகள் வந்தால், கிரகப்பிரவேசத்திற்கு தவிர்க்கலாம். கிரகப்பிரவேசத்திற்கு குறிக்கின்ற நாளானது, லக்கினத்திற்கு எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.




அதுபோல,

சூரியனுக்கோ அல்லது லக்கினத்திற்கோ ஏழாமிடத்தில், கிரகங்கள் நின்று, அதற்கு கேந்திர ஸ்தானங்கள் எனப்படும் 1, 4, 7-இல் சந்திரன் நின்றால் அதுவும் கிரகப்பிரவேசத்திற்கு ஏற்ற நாள் கிடையாது. மேலும் அதுபோல, சதயம், பூரட்டாதி, சுவாதி, உத்திரட்டாதி, பரணி, அஸ்வினி, அனுஷம், கேட்டை ஆகிய இந்த எட்டு நட்சத்திரங்களில் சனி பகவான் இருக்கும்போது பூமி பூஜையோ, வீடு கட்ட ஆரம்பிக்கவோ கூடாது. இவை கிரகப்பிரவேசத்திற்கும் உகந்தது அல்ல. அப்படி செய்தால், பேய் – பிசாசு, பிரம்ம ராட்ச்சசன்தான் அந்த வீட்டில் வாசம் செய்வார்கள்.

மேற்கூறியவை யாவும் கிரகப்பிரவேசம் செய்வதற்குரிய விதிகளில் முக்கியமானவற்றையே இந்த கட்டுரையில் எழுதி இருக்கிற்றேன். இதுபோலவே இன்னும் ஒரு விஷயத்தையும் மனையடி சாஸ்திரம் சொல்கிறது. அது என்னவென்றால், கிரகப்பிரவேசம் செய்ய இருக்கும் நாளில் மேற்கு, தெற்கு, அக்கினி மூலை (தென்கிழக்கு), வாயூ மூலை (வடமேற்கு) ஆகிய திக்குகளில் இருந்து புறப்பட்டு கிரகப்பிரவேசம் நடக்கும் வீட்டுக்கு செல்லக்கூடாது. அப்படி சென்றால், அது மிக பெரிய தோஷத்தை உண்டாக்கும் என்கிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

இதன் தொடர்ச்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்

வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி : bhakthiplanet@gmail.com

வாஸ்து தொடர்பான கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி :

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

ஒரு பக்க ஜாதகம் ரூ.59/-க்கு பெற இங்கே பார்க்கவும்.

எங்கள் EBOOKS பெற இங்கே பார்க்கவும்.

Send your feedback to: editor[at]bhakthiplanet[dot]com

 

 

 

 

 

 

 

 

 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

நமது Twitter பக்கம்

https://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

https://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2023 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 7 2023. Filed under Headlines, Home Page special, Vaasthu, Vaasthu, Vaasthu, Video, செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech