Saturday 23rd November 2024

தலைப்புச் செய்தி :

தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வரும் 25-ம் தேதி 7 மாவட்டங்களில் கனமழை  *  மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை - மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் *

Best Sleeping Position as per Vastu | தோஷம் இல்லாமல் உறங்குவது எப்படி?





Written by G Vijay Krishnarau

ஜி.விஜய் கிருஷ்ணாராவ்

தூங்குவதற்கு கூட சாஸ்திரமா? ஆம், இதற்கும் வாஸ்து சாஸ்திர விதி இருக்கிறது.

நமது இந்திய சாஸ்திர கலையானது ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்குரிய விதியை நிர்ணயித்து இருக்கிறது. அவற்றில் பல மூடநம்பிக்கையாக தோன்றாலாம். ஆனால் அதற்குரிய ஆராய்ச்சி தன்மையுடன் பார்க்கும்போது, சொல்லப்பட்ட விஷயங்களுக்குள் மேஞ்ஞானம் கலந்த விஞ்ஞானம் மறைந்து இருப்பதை உணர முடிகிறது. இதில் வாஸ்து சாஸ்திரத்தை பற்றி இங்கே குறிப்பிடும்போது இவற்றில் பாதி மருத்துவம் சார்ந்த தன்மையுடன் இருப்பதை பார்க்க முடியும். வாஸ்து சாஸ்திரம் என்கிற மனையடி சாஸ்திரத்தை பொறுத்தவரையில் நாம் எப்படி இந்த கலையை அனுகுகிறோம் என்பதை பொறுத்து பலன் கிடைக்கிறது.

மனையடி சாஸ்திரத்தை மேம்போக்காக பார்த்தால், வெறும் மண்ணும் கற்களும் என்ன செய்துவிட போகிறது? என்றே நினைக்கத் தோன்றும். ஒரு கட்டடம் எப்படி நமது முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துவிடும்?, என்று கேலியாக பேச தோன்றும். ஆனால் உண்மையில் இங்கே, கதவுக்கும் கண் உண்டு, சுவற்றுக்கும் காது உண்டு.

ஒரு மனையை தேர்வு செய்யும் நிலையில் இருந்து, பூமி பூஜை தொடங்கி, கட்டடத்தை எழுப்பி அங்கே குடிபுகும் வரையில் நிகழும் ஒவ்வொரு நிலையிலும் மிக கவனமாக அனுகிட வே்ணடியது கட்டாயமாகும்.

இப்படிதான் கட்ட வேண்டும் என்பதற்கு பதிலாக, இப்படியும் கட்டிக்கொள்ளலாம் என்று பல நேரங்களில் நமக்குள் சமரசம் செய்துக் கொண்டுதான் இங்கே பல கட்டடங்கள் இன்று எழுப்பப்படுகிறது. அந்நேரங்களில் அக்கட்டடம் நம் விதியை எண்ணி சிரிக்குமா? அழுமா? என்று தெரியாது.




இன்று நாம் சாஸ்திரத்தில் தொடங்கி, விஞ்ஞானம்வரையில் நமது சௌகர்யத்திற்காக அமைத்து கொள்ளவே விரும்புகிறோமே அன்றி, அதன் விதிகளுக்கு கட்டுப்படுவதில்லை.

விதிகளுக்கு கட்டுப்பாடத எந்த விஷயமும் சிக்கலைதான் தரும். இதனை பலர் புரிந்துக் கொண்டாலும் செயல் என்று வரும்போது, விதியை மீறி நமக்கு நாமே சிக்கலை உண்டாக்கிக் கொண்டு, பழியை இறைவன் மீதும், சாஸ்திரங்களின் மீதும் போட்டுவிட்டு நாம் சமாதானம் அடைந்துவிடுவது சகஜமாகிவிட்டது.

வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு மனிதன் உறங்கும் நிலையில் கூட, அவன் எப்படி உறங்க வேண்டும்? என்று விதித்து இருக்கிறது. ஒரு கட்டடத்திற்குள் வாஸ்து சாஸ்திரபடி படுக்கை அறை அமைத்துக் கொண்டாலும், அங்கே எப்படி படுக்க வேண்டும்? என்பதையும் சாஸ்திரம் சொல்லி இருக்கிறது..

படுக்கும்போது கூட வாஸ்து பார்க்க வேண்டுமா? என்ன ஸார் படுத்துறீங்க என்று நீங்கள் கேட்கலாம். என்ன செய்வது? நம் நலனுக்காகதானே சாஸ்திரமாக பல விஷயங்களை இயற்றி வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், படுக்கை அறையில் நாம் எப்படி படுத்தால் நன்மை கிடைக்கும்? நாம் உறங்கும் நிலையை வைத்து நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்? என்று கணித்தும் வைத்திருக்கிறார்கள்.

ஒரு சமயம், சுவாமி விவேக்கானந்தர் உறங்கி கொண்டிருந்த போது, அவர் உறங்கும் நிலையை கவனித்தே, சுவாமி விவேக்கானந்தருக்கு ஆயுள் குறைவு என்று சொன்னார் அவரின் குரு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நாம் படுக்கும் நிலைக்கு ஏற்ப உடல்நலனில், ஆரோக்கியத்தில் சில விஷயங்களை முன்னேரே தெரிந்துக்கொள்ள முடியும் என்கிறது மருத்துவ விஞஞானம்.

அந்த வகையில் –




வடக்கில் தலை வைத்து படுத்தால், சிந்தனைகள் தெளிவாக இருக்காது என்கிறது வாஸ்துகலை. மேலும், வடக்கில் தலை வைத்து படுப்பவருக்கு நிம்மதியும் இருக்காது.

மேற்கில் தலை வைத்து படுத்தால் நல்ல அந்தஸ்து கிடைக்காது.

ஆண்கள் வலதுபுறம் திரும்பி நீண்ட நேரம் படுத்தால் தாய்க்கு ஆகாது.

ஆணோ அல்லது பெண்ணோ கவிழ்ந்து படுத்தால் தந்தைக்கு ஆகாது.

இவை, வாஸ்து சாஸ்திரபடி அறிவுறுத்தப்படும் முக்கியமான விதிகள்.

ஒருவரின் ஜாதகப்படிதானே வாழ்க்கை நடக்கும். அப்படி இருக்கும்போது, பிள்ளைகள் படுக்கும் நிலையை பொறுத்து தாய்க்கு ஆகாது தந்தைக்கு ஆகாது என்பதெல்லாம் எப்படி ஏற்புடையதாக இருக்கும்? என்று கேள்வி எழலாம்.

அவர்களின் (பெற்றோரின்) ஜாதக ரீதியாக பாதிப்பு ஏற்பட வேண்டும் என்று விதி இருக்கும்போதுதான், அவர்களின் பிள்ளைகளும் மேற்சொன்னபடி நடந்துக்கொள்வர் என்பது நியதி.

தெற்கில் தலை வைத்துப்படுத்தால், ஆரோக்கியத்திற்கு நல்லது. புகழ் கிடைக்கும்.

கிழக்கில் தலை வைத்துப்படுத்தால் செல்வாக்கு பெருகும்.

இவை, வாஸ்துபடி அமைக்கப்படும் படுக்கை அறைக்குக்குரிய முக்கிய துணை விதிகளில் ஒன்றாகும். எளிமையாக இருக்கும் இந்த விதிகள், மிக பெரிய மாற்றத்தை நம் வாழ்க்கையில் நிச்சயம் உருவாக்கும்.

நன்றி..




மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

https://twitter.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2021 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Dec 31 2021. Filed under Bhakthi planet, English, Headlines, Home Page special, Video, செய்திகள், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech