Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

இராகு-கேது பெயர்ச்சி – மனவேதனை தீருமா? மரண பயம் போகுமா?


Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648,

அன்பார்ந்த பக்தி பிளானட் அன்பர்களுக்கு வணக்கம். நான் இராகு, கேது பெயர்ச்சி பற்றி ஏன் இப்படி தலைப்பு கொடுத்தேன் என்றால், கடந்த மார்ச் மாதம் முதல் என்ன ஆகுமோ? எப்படி போகுமோ நம் வாழ்க்கை? என்ற வேதனை, மனதில் ஒரு இனம் புரியாத பயம் அனைவருக்கும் இருந்து வருகிறது.

நமக்கு பிடித்தவை, இதுவரை வெளியே சாப்பிட்டு வந்த உணவுகளை, பண்டங்களை கூட சாப்பிடக் பலருக்கு பயம் வந்துவிட்டது. சாப்பிட்டால் என்ன வியாதி வருமோ? ஒருவேளை வைரஸ் நோய் வந்து விட்டால் நம் உயிர் என்னாவது? நம் குடும்பம் சூழ்நிலை என்னாவது? இவ்வாறான மரண பயத்தில், உயிருக்கு உயிரான நண்பர்களிடம் கூட வாய் கட்டிக்கொண்டு, மாஸ்க் அணிந்து கொண்டு தள்ளி சில அடி தூரம் தள்ளி நின்று பேசுகின்றோம்.

என்ன கொடுமை இது?

இயற்கை சதியா? தெய்வ தண்டனையா? எது எப்படியோ அதை ஏற்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இந்த மனவேதனை மரணபயம் இரண்டும் சாயா கிரகங்களான பலம் பொருந்திய இராகு பகவானால், கேது பகவானால் நிவர்த்தி செய்ய முடியுமா?

இருண்ட காட்டில் தத்தளித்துக்கொண்டு, “தெய்வமே நான் மட்டும் இருட்டில் தவிர்க்கவில்லை, குடும்பத்தோடு வழி தெரியாமல் தவிக்கிறேன் என்று மிகுந்த பயத்தோடு தடுமாறி வந்துகொண்டிருக்கும் நம்மை, பகவான் இராகு, கேது இருவரும், இருண்ட காட்டில் இருந்து நம்மை Highway-க்கு வழி காட்டுவாரா? என்று பார்ப்போம்.

01.09.2020 செவ்வாய்கிழமை அன்று பவுர்ணமி. அருமையான நாள். அன்று மதியம் 2.15-க்கு மிதுனத்தில் இருக்கும் இராகு ரிஷபத்திற்கும், தனுசில் இருந்து கேது பகவான் விருச்சிக ராசிக்கும்  பெயர்ச்சியாகி  செல்கிறார்கள். சரி,  இராகு-கேது எந்த சாரத்தில் செல்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.

அதாவது ஒருவர், நான் அமெரிக்காவில் வேலை பார்க்கிறேன் என்றுச் சொன்னால், ஆஹா அவர் அமெரிக்காவில் இருக்கிறார் என்று பெரியதாக நினைக்கக்கூடாது. அமெரிக்காவில் வங்கியில் வேலை செய்கிறாரா? அல்லது காபி ஷாப்பில் வேலை செய்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

அதாவது, ஆபீஸராக இருந்தால் அதற்கு ஒரு மதிப்பு, சம்பளம் இருக்கும். காபி ஷாப்பில் இருந்தால் அதற்கு ஏற்ப சம்பளம் இருக்கும். அதைப்போலவே, இராகு ரிஷபத்தில் வந்துவிட்டால், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிஷம் நட்சத்திரத்திலும், கேது பகவான் விருச்சிகத்தில் புதன் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்திலும் அமரப் போகிறார்கள். அப்படியானால் செவ்வாய்க்கு உயர் பதவி, ஸ்பெகுலேஷன், லாட்டரி யோகம், போக வாழ்க்கை தந்திடும் உரிமை உண்டு. அதுமட்டுமல்ல வீடு, தோட்டம், நிலம் என வாரி கொடுப்பார்.

கல்வி, சாதுர்யப் பேச்சு, வியாபாரம், நாட்டியம், போன்றவற்றை கொடுப்பவன் புதன்.  இனி இந்த இராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு  நாம் மீண்டு வருவோமா என்று பார்ப்போம்.

இப்போது ஒவ்வொரு ராசியாக பலன் பார்ப்போம்.

அன்புள்ள மேஷ ராசி அன்பர்களே…. இராகு பகவான் இரண்டாம் இடத்திலும், கேது பகவான் எட்டாம் இடத்திலும் வரப்போகிறார்கள். ஜென்ம அஷ்டமாதிபதியான செவ்வாய் சாரத்தில் வருகிற இராகு 2-ம் இடத்தில் இருப்பதால் டாம்பிகமாக வாக்கு கொடுக்காதீர்கள். ஷேர் மார்கெட் விஷயத்தில் விரயங்கள் தரும். மற்றவர்களின் பிரச்சையில் தலையிடாதீர்கள். தடைபட்ட காரியங்கள் கைகூடும். கெட்ட பெயர் மறையும். மதிப்பு  பெருகும். தைரியம் அதிகரிக்கும்.  வழக்கு இருந்தால் வெற்றி பெறும். வீடு, மனை அமையும். தடைப்பட்ட தொழில் துவங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். எட்டாம் இடத்தில் கேது இருந்தாலும் பயம் வேண்டாம். புதன் சாரத்தில் வருவதால் மனதில் பட்டதை செய்யுங்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு செய்ய வேண்டாம். தேவைக்கு ஏற்ப செலவு செய்யுங்கள். உடல்நலனில் கவனம் தேவை. வாக்குவாதம் வேண்டாம். இராகு-கேது நன்மையே செய்யும்.

அன்புள்ள ரிஷப ராசி அன்பர்களே  இராகு பகவான் ஜென்மத்திலும், கேது பகவான் சப்தமத்திலும் வருகிறார்கள். செவ்வாய் சாரத்தில் வரும் இராகு பகவான் அள்ளிக் கொடுக்கப் போகிறார். கஷ்டங்கள், ஏமாற்றங்கள் அத்தனையும் பறந்து விடும்.  செய்வதறியாது இருந்த நீங்கள் இனி செய்யும் காரியங்கள் அனைத்திலும் காசுதான். மனதில் ஒரு மகிழ்ச்சி. இனி கவலை இல்லை என்ற தைரியம். புதிய தொழில் துவங்கும். காசுக்கு பஞ்சமில்லை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டு நண்பர்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட கல்வி, சுபநிகழ்ச்சிகள் வீறு கொண்டு வரும். 7-ம் இடத்தில் வரும் கேது பகவான், புதன் சாரத்தில் வருவதால், மனைவி மற்றும் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். திருப்பணிகள்  செய்வீர்கள். நன்மைகள் நாடி வரும். தன, பஞ்சமாதிபதி சாரத்தில் கேது இருப்பதால், மலைபோல் இருந்த பிரச்னை மடுவாக கரைந்து ஓடும். உங்கள் செயல் மற்றவர்களை திரும்பி பார்க்க வைக்கும்.

அன்புள்ள மிதுன ராசி அன்பர்களே….  இராகு பகவான் 12-ம்   இடத்திலும், கேது பகவான் 6-ம் இடத்திலும் வருகிறார்கள். 12-ம் இடம் சயன ஸ்தானம்,  செவ்வாய் சாரத்தில் வருவதால், லாபாதிபதி, ரோகாதிபதி சாரத்தில் வருவதால் திட்டங்கள் நிறைவேறும். கேட்பதற்கு மேல் பணம் கைக்கு வரும். பயணங்கள் தொடரும். கடன் பிரச்சனை தீர வழி பிறக்கும். வாகன மாற்றம், வீடு மாற்றம் ஏற்பட வழி வரும். பெற்றோர் உடல்நலனில் இனி முன்னேற்றம் தெரியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதியாக தூக்கம் அமையும். தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த நீங்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள். 6-ல்  வரும் கேது பகவான் ஜென்ம, சுகாதிபதி சாரத்தில் வருவதால், திடீர் என அதிர்ஷ்ட காற்று வீசும். குலதெய்வ வழிபாட்டால் பெரும் நன்மையை செய்வார். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய உபாதை கூட மருந்து, மாத்திரைகளால் குணமாகும்.  முக்கியமாக யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இராகு, கேது  உங்களுக்கு மகிழ்ச்சி கொடுப்பார்கள்.




அன்புள்ள கடக ராசி அன்பர்களே….  உங்களுக்கு இராகு பகவான் 11-ல்,  கேது பகவான் 5-ம் இடத்தில்  வருகிறார்கள். இராகு லாபஸ்தானத்தில் 5,10-க்குரிய  செவ்வாய் சாரத்தில் வருவதால், எதற்கும் அஞ்ச வேண்டாம். தொடுங்கள் அம்பை விடுங்கள். தொட்டது பொன்னாகும். போராடிய வாழ்க்கை சீர்பெறும். சுற்றி இருந்த பிரச்சனை சிறகு போல் பறந்து விடும்.  கடன்கள் தீரும்.  வாடகை வீட்டில் இருந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.  வெளிநாடு செல்ல வாய்ப்பு வரும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும்.  எதிர்பாரா நன்மைகள் ஏற்படும். மனைவி, மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் தீரும். கேது, கீர்த்தி ஸ்தானமான புதன் சாரத்தில் வருவதால் இதுநாள்வரை இழுத்துக் கொண்டிருந்த வழக்கு வெற்றி பெறும். பழைய கடன்கள் வசூலாகும். தூரதேசத்து நண்பர்களின் உதவி கிட்டும். தொழில் அமைய வாய்ப்பு வரும். எதிராளிகள் செக்கில் சிக்கிய எள்ளை போல பிழிந்து எண்ணெய் ஆகிவிடுவார்கள். பஞ்சம கேது பெரும் யோகம் கொடுக்கப் போகிறது.

அன்புள்ள சிம்ம ராசி அன்பர்களே  உங்கள் ராசிக்கு இராகு பகவான் 10-ல்  செவ்வாய் சாரத்தில் வருகிறார். கேது பகவான் 4-ம்  இடத்தில் புதன் சாரத்தில் வருகிறார்.  சுக, சாரத்தில் இராகு வருவதால் புண்பட்ட உடல் இனி பொன்னிறமாகும். ஆம். எவ்வளவுக்கு எவ்வளவு கஷ்டப்பட்டீர்களோ அவ்வளவும் தீர்ந்து, மீண்டும் பெரும் முன்னேற்றம் அடைவீர்கள்.  உடலளவில், மனதளவில் இருந்த சோர்வு நீங்கி விடும்.  திட்டங்கள் நிறைவேறும். மண்ணை தொட்டாலும் பொன்னாகும்.  பாக்கியாதிபதி சாரம் சாதாரணமானது அல்ல.  கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் இறைவனின் அனுகிரகத்தால் இனி எல்லாம் நன்மையே.  புதிய தொழில் துவங்குவீர்கள். தடைபட்ட வியாபாரம் புத்துணர்வு பெறும். பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் தரும். .கேது பகவான், சுக ஸ்தானத்தில் இருந்தாலும் தன, லாபாதிபதி சாரத்தில் இருப்பதால் சுகம் கெடாது. கெட்ட சுகம் மீண்டு வரும். கேந்திர கேது, தாயாருக்கு உடல்நலனில் நலம் செய்யும். பணம் கைக்குக் கிட்டும். முக்கியமாக வழக்கு வெற்றி தரும். இதற்கு இராகுவே காரணம். இராகு, கேதுவால் உங்களுக்கு லாபமே.

அன்புள்ள கன்னி ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு இராகு பகவான் 9-ல்  செவ்வாய் சாரத்தில் 3-8-க்குரிய  சாரத்தில் வருகிறது. கேது பகவான் 3-ம்  இடத்தில் 1-10-க்குரிய  புதன் சாரத்தில் வருகிறது. பாக்கிய ராகு யோகத்தை கொடுக்கும். பழைய கடன்கள் அனைத்தும் தீர வழி வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோரின் உதவி கிடைக்கும். பயணங்களால் தனலாபம் உண்டு. அரசாங்கத்தால் நன்மை கிடைக்கும். பல நன்மைகள் நடந்தாலும் நண்பர்கள் வசம் உஷார் தேவை. தேவை இல்லாமல் பல சிக்கல்கள் தேடி வரவும் வாய்ப்புண்டு. சகோதர வர்க்கத்தில் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சொத்து வாங்கும் பொழுது கவனமாக பார்த்து வாங்கவும். கேது 3-ல்  இருப்பது நன்மையே. ஜென்மாதிபதி சாரத்திலும் இருப்பதால் ஜாமீன் கையெழுத்து விஷயமே வேண்டாம். யாருக்கும் சாட்சி கையெழுத்தும் போட வேண்டாம். சூழ்ச்சிக்கு பலியாக வேண்டிய நிலை ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் இடப்பெயர்ச்சி வர வாய்ப்பு இருக்கிறது. புதிய தொழில் துவங்க வாய்ப்பு வரும். இராகு, கேதுவால் நன்மைகள் உண்டு. பயம் வேண்டாம்.

அன்புள்ள துலா ராசி அன்பர்களே  உங்கள் ராசிக்கு இராகு பகவான் 8-ம்  இடத்தில் செவ்வாய் சாரத்திலும்,  கேது பகவான் 2-ம் இடத்தில்  புதன் சாரத்திலும் வருகிறார்கள். 8-ம்  இட  இராகு கெடுக்கும் என்று கவலை வேண்டாம். தன, சப்தமாதிபதி சாரத்தில் வருவதால் குடும்பத்தில் சுப செலவும்,  சில மருத்துவ செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைம் இருக்கும்.  கணவன்-  மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் தீரும்.  திருமண விஷயத்தில் கவனம் தேவை.  வாக்கு ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்கள் பொருளாதார சக்திக்கு மீறி பிறருக்கு பணம் தருவதாக சொல்லிவிட்டு அதனால் பிரச்சினையில் மாட்ட வேண்டாம்.  உத்தியோக விஷயத்தில் கரும்பு சக்கை போல் பிழிந்து எடுப்பார்கள்.  அலைச்சல் அதிகம் கொடுக்கும்.  தலைவலி, கண்வலி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தூரத்து நண்பர்களால் லாபம் உண்டு. பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. பாக்கியாதிபதி சாரத்தில் கேது இருப்பதால், குடும்ப செலவு அதிகரிக்கும். பொதுவாக, இந்த இராகு-கேது பெரும் பங்கு நன்மை சிறு பங்கு விரயமும் கொடுக்கும்.

அன்புள்ள விருச்சிக ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் கேதுவும், சப்தமத்தில் இராகுவும் வருகிறார்கள். கேது அஷ்டம, லாபாதிபதியான புதன் சாரத்திலும், இராகு ஜென்ம, ரோகாதிபதியான செவ்வாய் சாரத்திலும் வருவதால் நன்மைகள் உண்டு.  எல்லாம் இருந்தாலும்  இல்லாதது போல் மனதில் மாயையை ஜென்ம கேது கொடுப்பார்.  உடல்நலனில் அதிக கவனம் செலுத்துங்கள்.  உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தடைப்பட்ட கல்வி தொடரும். உத்யோகத்தில் உயர்வு உண்டு. கஷ்டங்கள் மறையும். மனதில் தேவையில்லாத கற்பனை வேண்டாம். வீடு, மனை வாங்குவீர்கள் திருமணம் கைகூடும். வீண் வாக்குவாதம் வேண்டாம். உடம்பு சரியில்லை என்னவோ போல் இருக்கிறது என்பீர்கள்.  இதற்கு ஜென்ம கேதுவே காரணம். பயம் வேண்டாம். தெய்வ வழிபாடு உங்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும். ஏழாம் இடத்திலுள்ள இராகுவால் கணவன் அல்லது மனைவியால் நன்மைகள் உண்டு. 7-ம் இடம்  களத்திர ஸ்தானம். ஆகவே இராகு நன்மை அதிகம் செய்வார். நாக வழிபாடு மிக முக்கியம். பொதுவாக இராகு, கேது நன்மையே தரும். உங்களுக்கு அயல்நாட்டு பயணம் திடீரென அமையும். அதனால் லாபம் பெறுவீர்கள்.

அன்புள்ள தனுசு ராசி அன்பர்களே  உங்கள் ராசிக்கு 6-ம்  இடத்தில் இராகு பகவானும், 12-ம்  இடத்தில் கேது பகவானும் அமையப் பெறுகிறார்கள். 6-ம் இட இராகு  பஞ்சமாதிபதி செவ்வாய் சாரத்தில் வருவதால், கைநிறைய காசு தான். பெரும் முன்னேற்றம் உண்டு. கடன், வழக்கு, ரோகம் அத்தனையும் தீரும். சண்டை, சச்சரவு ஆக இருந்த வீடு இனி நிம்மதி பெருமூச்சு விடும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. நண்பர்களால் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம்  அமையும்.  இதுநாள் வரை இருந்த துன்பங்கள் தீரும். கல்வியில் முன்னேற்றம் இருக்கிறது. அரசாங்க அதிகாரிகளால் நன்மைகள் கிடைக்கும். வழக்கு தீரும். மனைவியால் லாபம் உண்டு. சிலருக்கு திருமணம் திடீரென அமையும். 12-ம் இட  கேது சயன ஸ்தானத்தில் சப்தம, கர்மாதிபதியான புதன் சாரத்தில் இருப்பதும் வாகனங்களால், சிறு,சிறு பிரச்சினை ஏற்படும். வாகனம் ஓட்டும்பொழுதும் நிதானம் தேவை. தூரதேசம் போக  வேண்டாம்.  குலதெய்வ வழிபாடு முக்கியம். கட்டப்படாத பாதியில் நின்ற கட்டிடம் கட்டி முடிக்கப்படும். பொதுவாக இராகு, கேது உங்களுக்கு நன்மை செய்யும்.

அன்புள்ள மகர ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 5-ம்  இடத்தில் இராகு சுக, லாபாதிபதி செவ்வாய் சாரத்திலும், 11-ம்  இடத்தில் கேது ரோக, பாக்கியாதிபதி புதன் சாரத்திலும் வருகிறார்கள். வாட்டும் பிரச்சனைகள் தீர்ந்து நன்மைகள் அள்ளித் தரும் என்று சொல்லலாம். 5-ம்  இடம் லட்சுமி வாசம் செய்யும் இடம். அந்த இடத்தில் இராகு பகவான் அமர்வதால் பல காரியங்கள் வெற்றி கொடுக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். மங்கள வாத்தியம் வீட்டில் ஒலிக்கும். நீண்ட நாள் பிரச்சினைகள் பல தீரும். பிள்ளைகள் விஷயத்தில் பெருமை கிடைக்கும். அயல்நாட்டில் இருந்தவர்கள், வேலை செய்தவர்கள் தாய்நாடு வர வாய்ப்பு உண்டு. உத்தியோகம் செய்பவர்கள் சொந்தமாக தொழில் துவங்க ஆரம்பிப்பார்கள். பெரிய தொழில்களில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பெரும் தொகை கைக்கு வருவது கடினம். 11-ல்  உள்ள லாப  கேது ரோகாதிபதி, பாக்கியாதிபதி சாரத்தில் இருப்பதால் மருமகன், மருமகள் விஷயத்தில் சச்சரவு வந்தாலும் நிதானம் தேவை. தேவையில்லாத வாக்குவாதம் வரும். உடல்நலனில் அலர்ஜி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக இராகு, கேது நன்மை தரும்.

அன்புள்ள கும்ப ராசி அன்பர்களே  உங்கள் ராசிக்கு 4-ம் இட இராகு, 10-ம் இட கேது  துன்பங்களை துரத்தி, இன்பங்கள் தருவார்கள். சுக ஸ்தானத்தில் இருக்கும் இராகு திரிதிய, ஜீவன ஸ்தானத்தின் சாரத்தில் இருப்பதால் பழுதான வண்டி இனி படு வேகமாக பறக்கும். ஆம். எவ்வளவு கஷ்டங்கள், தடைகள் இருந்தாலும் அத்தனையும் தவிடுபொடியாகும். தீராத நோய் பிடியில் இருந்தவர்கள் சுகம் பெறுவர்.  கல்வி தடை, பாதியில் நின்ற கட்டிடம் இப்படி எல்லா தடையும் நீங்கி விறுவிறுவென முன்னேற்றம் அடையும்.  சிறியதாக துவங்கலாம் என்று எண்ணிய காரியங்கள் வெற்றிகரமாக பெரிய அளவில் வரும். கோபம் வேண்டாம். முக்கியமாக கணக்கு வழக்கில் கவனம் தேவை. உழைப்பு அதிகம் உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும். 10-ம் இட கேது,  தெய்வ அனுகிரகத்தால் நன்மைகள் குடும்பத்திற்கு தரும். தாய்வழியில் பெரிய நன்மைகள் கிடைக்கும். நாலாம் இடம் தாயாரைக் குறிக்கும் இடம்.  அந்த இடத்தில் உள்ள இராகு நன்மைகளை வாரி வழங்குவார். சகோதர, சகோதரி சண்டைகள் சமாதானம் ஆகும். உறவினர்கள் வருகை அதிகம் கொடுக்கும். சுகங்கள் அதிகரிக்கும். இராகு-கேது நன்மைகள் பல செய்யும்.

அன்புள்ள மீன ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 3-ம்  இடத்தில் இராகு பகவானும், கேதுபகவான் 9-ம் இடத்திலும்  வருகிறார்கள். பாக்கியாதிபதி செவ்வாய் சாரத்தில் இராகு வருவதால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் தீரும். உடல்நலனில் சுகம் உண்டாகும். தெய்வ அனுகூலம் கிட்டும். சொத்துக்கள் சேரும். பெரியவர்களின் ஆசியால் பல நன்மைகள் உண்டாகும்.  மனதளவில் இருந்த பாதிப்பு குறையும். புகழ், கீர்த்தி கிடைக்கும். வேலை விஷயத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகளின் கண்டிப்பு அதிகரிக்கும். இதற்கு உங்கள் தவறே காரணம். வெளிநாட்டில் இருப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். கிடைக்கின்ற பணம் சீக்கிரம் கரையும். சிலர் தனக்கு எல்லாம் தெரியும் என்று மற்றவர்களை மதிக்காமல் பள்ளத்தில் விழுவர். ஏன் என்று பார்த்தால் அவர்களுக்கு கேது திசையோ, கேது புத்தியோ  நடைபெற்றுக் கொண்டிருப்பதை கவனிக்கலாம். அதனால்  கேது திசை, கேது புக்தியில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்க தண்டனை உண்டு. கேது சப்தமாதிபதி புதன் சாரத்தில் இருப்பதால், வழக்கு விஷயத்தில் தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.  உஷாராக இருக்கவும்.  இந்த இராகு, கேது நன்மை செய்யும்.

அனைவருக்கும் இராகு-கேது பெயர்ச்சி நல்வாழ்த்துக்கள் !

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Aug 25 2020. Filed under Astrology, Bhakthi planet, Headlines, இராசி பலன்கள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »