பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா: முதல்அமைச்சர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை
சென்னை,
ஜூலை 15-ந் தேதி காமராஜரின் பிறந்த நாளாகும். தமிழக அரசின் சார்பில் இந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் (கலங்கரை விளக்கம் அருகே) உள்ள காமராஜர் சிலை இன்று அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
சிலை அமைந்துள்ள பகுதியில் துணியால் கூடாரம் போடப்பட்டு இருந்தது. காலையில் இருந்தே மேளதாளங்கள் இசைக்கப்பட்டன. காமராஜரின் சிலைக்குக்கீழ் அவரது படம் வைக்கப்பட்டு இருந்தது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று காலை 11.45 மணிக்கு அங்கு வந்தார். காமராஜரின் படத்துக்கு மலர் தூவி, படத்தை இருகரம் கூப்பி வணங்கினார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திரபாலாஜி, சண்முகநாதன், சென்னை மேயர் சைதை துரைசாமி, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் வரவேற்றனர்.
தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், அரசு செயலாளர் ராஜாராம் மற்றும் பல்வேறு நாடார் அமைப்புகளின் பிரதிநிதிகள், அ.தி.மு.க. பிரமுகர்கள் பெசன்ட் நகர் எஸ்.நடராஜன், ஆர்.முத்துக்கிருஷ்ணன் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் அங்கு வந்து காமராஜரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel