மதுரா பாராளுமன்ற தொகுதியில் நடிகை ஹேமமாலினி வெற்றி நடிகைகள் நக்மா, ஜெயப்பிரதா, தோல்வியை தழுவினார்கள்
புதுடெல்லி,
மதுரா பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். பிஜ்னோர் தொகுதியில் நடிகை ஜெயப்பிரதாவும், மீரட் தொகுதியில் நடிகை நக்மாவும் தோல்வி அடைந்தனர்.
நடிகர்–நடிகைகள் போட்டி
எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த பாராளுமன்ற தேர்தலில் வட மாநிலங்களில் அதிக அளவில் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு கட்சிகளின் சார்பில் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றி பெற்றனர். சிலர் தோல்வியை தழுவினார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகை ஹேமமாலினி வெற்றி பெற்றார். ராஷ்டிரீய லோக் தளம் வேட்பாளர் ஜெயந்த் சவுத்ரியை விட அவர் 1 லட்சத்து 72 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றார். பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் வினோத் கன்னா வெற்றி பெற்றார்.
நக்மா தோல்வி
ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட டெலிவிஷன் நடிகை ஸ்மிரிதி இரானி தோல்வி அடைந்தார்.மீரட் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை நக்மா, பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்ட நடிகை ஜெயப்பிரதா (ராஷ்டிரீய லோக் தளம்), காசியாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் ராஜ்பாப்பர் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
காசியாபாத் தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங்கிடம் நடிகர் ராஜ்பாப்பர் (காங்கிரஸ்) தோல்வி அடைந்தார்.
சண்டிகார் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் களம் இறங்கிய நடிகை கிரண் கெர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலை 69 ஆயிரத்து 642 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் போட்டியிட்ட மற்றொரு நடிகை தோல்வியை தழுவினார்.
மனோஜ் திவாரி
சங்க்ரூர் தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் பக்வந்த் மான் சிரோன்மணி அகாலிதள வேட்பாளர் சுக்தேவ் சிங் திண்ட்சாவை வென்றார்.உத்தரபிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட ஜாவேத் ஜாப்ரி தோற்றார்.வடகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்ட போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி (பா.ஜனதா) வெற்றி பெற்றார்.
கிழக்கு ஆமதாபாத் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் பரேஷ் ராவல் காங்கிரஸ் வேட்பாளர் ஹிம்மத்சிங் பிரகலாத் சிங் பட்டேலை தோற்கடித்தார்.
மூன் மூன் சென் வெற்றி
பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன் சின்கா தன்னை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட நடிகர் குணால் சிங்கை தோற்கடித்தார்.மேற்கு வங்காளம் மாநிலம் பங்குரா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை மூன் மூன் சென், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பாசுதேவ் ஆச்சார்யாவை விட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.ஸ்ரீராம்பூர் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி தோல்வி அடைந்தார்.மேதினிபுர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை சந்தியா ராய் வெற்றி பெற்றார்.
நடிகை ரம்யா தோல்வி
கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரம்யா ஜனதாதள வேட்பாளர் சி.எஸ்.புட்டராஜூவிடம் தோல்வி அடைந்தார்.வடமேற்கு மும்பை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை ராக்கி சாவந்தும் தோல்வியை தழுவினார்.கேரள மாநிலம் சாலக்குடி தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் இன்னொசென்ட் வெற்றி பெற்றார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel