மலேசிய விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்து என தகவல்
கோலாலம்பூர்,
மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு 239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளனது என தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். 6.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டிய விமானம், தீடிரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும் பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு இருந்தது.
இந்த நிலையில், 239 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் வியாட்நாம் அருகே உள்ள தேசு தீவில் சென்று கொண்டிருந்த போது கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது என்று தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் நிலைமை குறித்து அஞ்சப்படுகிறது. விமானத்தில் 154 சீன பயணிகள் இருந்தாக கூறப்படுகிறது.
விபத்தை அடுத்து சீனாவில் இருந்து 2 மீட்பு கப்பல்கள் விரைந்துள்ளன. விபத்தில் சிக்கிய விமானத்தில் இந்தியர்கள் யாரும் இல்லை தகவல்கள் கூறிவருகின்றன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel