பலாத்காரத்தால் கற்பிழந்தவர்களுக்கு மருத்துவ வசதி: புதிய நெறிமுறைகள்
நாக்பூர், மார்ச். 4-
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களிடம் இதுவரை நடத்தப்பட்ட விஞ்ஞானப்பூர்வமற்ற இரு விரல் சோதனையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்டவருக்கு சோதனை மற்றும் மருத்துவ வசதி செய்து தரும் வகையில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் இரு அறைகள் ஒதுக்கப்படவேண்டும். ஒன்றில் மருத்துவ பரிசோதனைக்கான வசதியும், மற்றொன்றில் தடவியல் சோதனைக்கான வசதியும் செய்து தர வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பயங்கரமான மற்றும் விஞ்ஞானப்பூர்வமற்ற மருத்துவ பரிசோதனை முறை கைவிடப்பட்டு பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களை மனிதாபிமான உணர்வுடன் அணுக மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு மருத்துவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அவர்களுக்கு மாற்று ஆடைகள் வழங்கப்படவேண்டும். பலாத்காரத்திற்கான ஆதாரங்களை மென்மையான முறையில் சேகரிக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவமனை ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவேண்டும் எனவும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel