டாக்டர் மீது போலீசார் தாக்குதல்: ஆக்ராவில் 200 மருத்துவர்கள் ராஜினாமா
லக்னோ, மார்ச்.4-
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் மருத்துவர்கள் போராட்டத்தால் அங்கு மோசமான சூழ்நிலை நிலவுகிறது. தங்களது சக மருத்துவர் ஒருவரை போலீசார் தாக்கியதை கண்டித்து 200 மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ.வான இர்பான் சோலங்கிக்கும் மருத்துவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து அந்த மருத்துவர் போலீசாரால் தாக்கப்பட்டார். மாநிலம் முழுவதிலும் உள்ள மருத்துவர்கள் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கான்பூரில் நான்காவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள மருத்துவர்களும் போராட்டங்களில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
எய்ம்ஸ் மற்றும் லேடி ஹ்ரிஞ்ச் மருத்துவமனை டாக்டர்கள் கைகளில் கறுப்பு துணி கட்டி ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் நடத்த முடிவவெடுத்துள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel