நீக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கு மீண்டும் வேலை: ரங்கசாமி
புதுச்சேரி, மார்ச்.1–
புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:–
புதுவை பொதுப்பணி துறையில் பணி நீக்கப்பட்ட 1311 பேருக்கு வருகிற 3–ந் தேதி மீண்டும் பணி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.137 சம்பளமாக வழங்கப்படும். பொதுப்பணிதுறையில் பணி புரிந்து இறந்த ஊழியர்களின் வாரிசுகள் 150 பேருக்கு ‘கேஷுவல் லேபர்’ பணி வழங்கப்படும். கால்நடை மருத்துவ கல்லூரியில் பணி நீக்கப்பட்ட 109 பேர் 3–ந் தேதி மீண்டும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
காரைக்காலில் சிறப்பு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி அமைக்க வருகிற 3–ந் தேதி அடிக்கல் நாட்டப்படுகிறது. இதற்காக ரூ.45 கோடி ஓ.என்.ஜி.சி. வழங்கியுள்ளது.
புதுவை மாநிலத்தில் மேம்பாலங்கள் கட்ட ரூ.615 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுவையில் பால் தட்டுப்பாட்டை போக்க கறவை மாடுகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel