நஷ்டத்தை சரிகட்ட ரூ.1000 கோடி கடன் பெற அரசு உத்திரவாதத்தை எதிர்நோக்கும் ஏர் இந்தியா
புதுடெல்லி, பிப்.17-
இந்திய அரசால் நடத்தப்படும் ஏர் இந்திய விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டக் கணக்குகளையே காட்டி வருகின்றது. கடந்த 2013, டிசம்பர் முடிய மூலதன செலவு 26,033 கோடியாகவும், முதலீடுகள் கையிருப்பு 21,125 கோடியாகவும் கணக்குக் காட்டியுள்ள இந்த நிறுவனம் 3,600 கோடி நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான நடைமுறைகள் சாத்தியமில்லை என்பதால் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக வட்டி விகிதத்தில் வெளியாரிடம் கடன் பெறவேண்டும். இதற்கு மத்திய அரசின் உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே இதுபோல் 2,000 கோடி அரசு உத்தரவாதத்தின் மேல் பெற்றுள்ள நிலையில் இன்னும் 1,000 கோடி ரூபாய்க்கு அரசிடமிருந்து ஆதரவுக் கடிதத்தை எதிர்பார்ப்பதாக ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். இந்தக் காலாண்டின் நஷ்டம் 3,990 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரவிருக்கும் புதிய அரசாங்கம் ஏர் இந்தியாவின் நிர்வாகம் குறித்து ஒரு முடிவு எடுத்தாக வேண்டும் என்று விமானப் போக்குவரத்து உயர் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 18 மாதங்களாக விமான நிறுவன ஊழியர்களுக்கு 25 தவிகித சம்பளம் குறைவாகக் கொடுக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் விமானிகளுக்கு பறப்பதற்கு கொடுக்கப்படும் உதவித்தொகை கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் உள்ளது. இவர்கள் வேலைநிறுத்தம் போன்ற எந்தவிதமான தொழில்துறை நடவடிககைகளிலும் ஈடுபடாமல் இருக்க நாங்கள் எங்களால் இயன்றதை செய்துவருகின்றோம்.
ஆனால், அரசு எங்களின் பிரச்சினைகளையும் பார்க்கவேண்டும் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். இதுகுறித்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பதிலிலும் விமானத்துறை அமைச்சகம் தாமதத்தை ஒப்புக்கொண்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel