ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வரும் 10,11ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளில் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.. இவர்கள், தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி, கடந்த 20, 21ம் தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.. இதனிடையே மத்திய தொழிலாளர் நல ஆணையர், வங்கி ஊழியர்கள் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, 5 சதவீதத்தில் இருந்து 9.5 சதவீத ஊதிய உயர்வு வழங்குவதாக உறுதியளித்தார்..
இதனைத் தொடர்ந்து 10 சதவீத உயர்வு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார். ஆனால், 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 10 மற்றும் 11ம் தேதிகளில், நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கி சேவை முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. எனினும், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தடுக்கும் வகையில், மத்திய தொழிலாளர் நல ஆணையம், வங்கி ஊழியர் சங்கத்தினருடன் கடைசிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel