குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு அச்சுறுத்தல்: 2 ஆயிரம் தெரு நாய்களை வேட்டையாடும் ஒப்பந்த தொழிலாளர்கள்
மாஸ்கோ, பிப். 5-
ரஷ்யாவின் சோச்சி நகரில் வரும் 7-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி, முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய புராதனமான கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி சென்ற ஆண்டு ரஷ்யா வந்தடைந்தது.
ரஷ்யாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்று வந்து கொண்டிருக்கும் இந்த ஜோதியின் தொடர் ஓட்டத்தினை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடந்த அக்டோபர் மாதம் 6-ம் தேதி மாஸ்கோவில் தொடங்கி வைத்தார்.
குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் சோச்சி நகர வீதிகளில் கட்டுப்பாடில்லாமல் திரிந்துவரும் தெரு நாய்கள் விளையாட்டுப் போட்டிகளை காண வரும் வெளிநாட்டினருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என ரஷ்ய அரசு கவலை கொண்டுள்ளது.
சோச்சி நகரம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் தெரு நாய்கள் கேட்பார், மேய்ப்பார் இல்லாமல் சுற்றி வருவதால் இந்த பிரச்சினைக்கு எவ்வகையில் தீர்வு காணலாம் என நீண்ட நாட்களாக ஆலோசித்து தற்போது ஒரு அவசர முடிவை எடுத்துள்ளது.
அதன்படி, இந்த தெருநாய்களை உயிருடனோ அல்லது கொன்றோ பிடிக்கும் குத்தகையை ஒரு ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ள சோச்சி நகர நிர்வாகம் 6-ம் தேதிக்கு (நாளை) பிறகு அதிகாரிகளின் கண்களில் ஒரு தெரு நாய் கூட தென்படக் கூடாது என எச்சரித்துள்ளது.
இதனையடுத்து, 48 மணி நேரத்துக்குள் 2 ஆயிரம் நாய்களை ஒழிக்கும் அதிரடி வேட்டையில் ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
சோச்சி நகர தெருக்கள் முழுவதும் விஷம் கலக்கப்பட்ட இறைச்சி மற்றும் சுருக்கு கயிறுகளுடன் நாய்களை தேடி இவர்கள் சுற்றி வருவதை உள்ளூர் சிறுவர்கள் கூட்டமாக பின்தொடர்ந்து சென்று வேடிக்கை பார்த்து பொழுதை போக்கும் காட்சி சிரிப்பூட்டும் வகையில் உள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel