கோலி சோடா பட நடிகர்கள் மதுரை ரசிகர்கள் முன் தோன்றினர்
மதுரை,பிப்.5 – கோலி சோடா சினிமாவில் நடித்த நடிகர்கள் மதுரை ரசிகர்கள் முன் தோன்றினர். கடந்த வாரம் வெளிவந்த கோலி சோடா திரைப்படம் தமிழகம் எங்கும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. மதுரை வட்டாரத்தில் 28 தியேட்டர்களில் கோலி சோடா ரிலீஸ் செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டியிருக்கிறது. இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குநர் விஜய் மில்டன் நடிகர்கள் கிஷோர், குட்டமணி, பாண்டி, ஸ்ரீராம்,கதாநாயகி சாந்தினி, நடிகைகள் சுஜாதா, சேத்தி, இசையமைப்பாளர் அருணகிரி, ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் உள்ளிட்ட படக்குழுவினர் மதுரை வந்தனர். பின்னர் மதுரையில் கோலி சோடா திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களுக்கு இந்த நடிகர் குழுவினர் சென்று ரசிகர்கள் முன் தோன்றினர். அப்போது ரசிகர்கள் அவர்களை வரவேற்று ஆராவாரம் செய்தனர். நடிகர் குழுவினர்களுக்கு மலர்மாலைகள் அணிவித்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்தனர்.
பின்னர் படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
எனது இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் கோலி சோடா நான் 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றியுள்ளேன். 8 வருடங்களுக்கு முன்பே, கோலி சோடா படத்தின் கதையை தயார் செய்து வைத்திருந்தேன். பலமுறை முயன்று நானே தயாரிப்பு நிர்வாகத்தை ஏற்று தற்போது இந்த படத்தை வெளியிட்டுள்ளேன். இந்த படத்தில் 4 கதாநாயகர்கள் நடித்துள்ளனர். நம்மில் ஒவ்வொருவருக்கான அடையாளத்தை தேடிக்கொள்வதற்காகவே ஒருபாதையை தேர்வு செய்து அதில் நாம் பயணிக்கிறோம். இதனை மையமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களும் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தனர். கோலி சோடா படத்திற்கு தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் சோடா பார்ப்பதற்கு தண்ணீர்போலத்தான் தெரியும். ஆனால் அதை லேசாக குலுக்கினால் நுரையுடன் பொங்கி எழும். அதைப்போலத்தான் இந்த படத்தின் கதாநாயகர்களை லேசாக தட்டும்போது ஏற்படும் பிரிதிபலிப்புதான் படத்தின் கதையாகும். இந்த படத்தின் கதாநாயகர்கள் 15 வயது சிறுவர்கள். வாழ்க்கையின் அடுத்தக்கட்டம் பற்றியஎந்தக்கவலையும் இல்லாமல் சுற்றி திரியும் இந்த வயதுடையவர்கள்தான் இந்த கதைக்கு பொருத்தமானர்வர்கள் என்பதால்அவர்களை தேர்வு செய்தேன். நான் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக வந்துள்ளேன். எனது தந்தை இரண்டு படங்களை இயக்கினார். ஆனால் அந்த படங்கள் வெளியாகவில்லை. அவரது விருப்பத்தை நிறைவேற்றவே இந்த படத்தை நான் இயக்கி வெளியிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel