பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன் : ஒபாமா
அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா, தான் சிறுவனாக இருந்த போது படிப்பதற்கு அதிகாலையில் கண்விழித்தாலும், ஒரு பொறுப்பற்ற மாணவராக இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
டென்னெஸ்கி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் ஒபாமா பேசியபோது,
என்னுடைய பால்ய பருவத்தில் என்னுடைய தாய் என்னை தனி ஆளாக இருந்து வளர்த்தார். என்னுடைய தாத்தா, பாட்டியின் துணையோடு எங்கள் அனைவரையும் நன்றாக கவனித்துக்கொண்டார்.
6 வயதில் நான் வெளிநாட்டில் வளர்ந்தேன். எனவே படிப்பில் பின் தங்கி விடுவேன் என்ற கவலை எனது தாயாருக்கு இருந்தது. எனவே, அதிகாலை 4.30-5.00 மணிக்கே என்னை தட்டி எழுப்பி படிக்க செய்வார்.
ஆனால் அது எனக்கு பிடிக்காது. எனவே எழுந்திருக்க அடம் பிடிப்பேன். அதே நேரத்தில் 8 வயதான போது அதிகாலை 4 மணிக்கே எழுந்து படித்தேன்.பொருளாதார ரீதியில் மிகவும் கஷ்டப்பட்டோம். எங்களிடம் பணம் இல்லாததால் அரசின் கல்வி உதவி தொகை மூலமே படிக்க முடிந்தது. படிக்கும் போது சில நல்ல பழக்க வழக்கங்களை கடை பிடித்தாலும் எனது பள்ளிப்பருவம் முழுவதும் பொறுப்பில்லாத மாணவனாகத்தான் இருந்தேன் என குறிப்பிட்டார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel