ஏழாம் வகுப்பு மாணவனின் சான்றிதழில் ‘கிரிமினல்’ என்று குறிப்பு எழுதிய தலைமை ஆசிரியை சஸ்பெண்டு
நாக்பூர், பிப். 1-
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் அருகேயுள்ள வினோபா பவே நகரில் காஷ்மிர் வித்யா மந்திர் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துவந்த ஒரு மாணவன் தகாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பள்ளி நிர்வாகம் அந்த 14 வயது சிறுவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்தது.
‘இனி இதைப்போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம். அவன் இதே பள்ளியில் தொடர்ந்து படிக்க அனுமதியுங்கள்’ என கெஞ்சிய பெற்றோரின் வேண்டுகோளை காதில் போட்டுக் கொள்ளாத தலைமை ஆசிரியை, உடனடியாக பள்ளி மாற்று சான்றிதழை (டி.சி.) தயாரித்தார்.
பள்ளியை விட்டு நீக்கியதோடு மட்டும் நின்று விடாமல், அந்த டி.சி.யின் ஓரமாக ‘இந்த பையன் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவன்’ என்ற குறிப்பையும் எழுதி கையொப்பமிட்டு தந்துள்ளார்.
இதனால், அவனை வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் பெரும்பாடு பட வேண்டியதாகி விட்டது. இந்த தகவல் ஒரு ஆங்கில நாளிதழில் செய்தியாக வெளிவந்தது. இதனையடுத்து, மகாராஷ்டிர மாநில அரசின் பள்ளி கல்வி துறை விசாரணை நடத்தியது.
அந்த மாணவனின் எதிர்காலத்தை இருண்டகாலமாக்கிய காஷ்மிர் வித்யா மந்திர் பள்ளியின் தலைமை ஆசிரியை நுட்டன் ஜன்கம் என்பவரை பணி இடைநீக்கம் செய்துள்ளது. அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் உத்தரவிட்டுள்ளதகாவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சமூக ஆர்வலர்கள் சிலர், ‘தலைமை ஆசிரியர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தால் போதாது. பள்ளியின் நிர்வாகமும் இவ்விவகாரத்தில் குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்படும் சிறுவன் கிரிமினல் நடடிக்கையில் ஈடுபட்டிருந்தால், அது தொடர்பாக சிறார் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கி தந்திருக்க வேண்டும்.
இல்லையேல், மாணவனை திருத்தி வழிநடத்தி செல்ல வேண்டிய சமுதாய பொறுப்பு பள்ளிக்கும் உண்டு என்ற கடமையுணர்வுடன் அவனை சீர்திருத்த முயற்சித்திருக்க வேண்டும். அதைவிடுத்து, அந்த மாணவனின் டி.சி.யில் ‘கிரிமினல்’ என்று குறிப்பு எழுதி கையொப்பமிட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியை மட்டுமல்ல… பள்ளியின் நிர்வாகிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்’ என்று எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel