மது குடித்துவிட்டு வேலைக்கு வந்தால் ‘சஸ்பெண்டு’: என்.எல்.சி. நிர்வாகம் எச்சரிக்கை
நெய்வேலி, ஜன.31–
என்.எல்.சி. நிர்வாகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:–
என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் சில தொழிலாளர்கள் மது அருந்திவிட்டு குடிபோதையில் பிரச்சினையில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இது பணியிடத்து ஒழுக்கத்தையும், சூழ்நிலையையும் கெடுக்கும் விதமாக அமைகிறது.
என்.எல்.சி.யின் நிலை ஆணை விதியின்படி, பணியிடத்தில் மது அருந்துதல், அமைதி குலைவு ஒழுங்கின்மையாக நடத்தல் குற்றமாகும். தொழிலாளர்கள் குடிபோதையில் பணிக்கு வந்து தங்களுக்கும், சக தொழிலாளர்களுக்கும், எந்திரங்களுக்கும் பாதுகாப்பு இன்மையை ஏற்படுத்தி வருகின்றனர். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
என்.எல்.சி. உடமைகள் ஒவ்வொன்றையும், தொழிலாளர்கள் மிகுந்த பாதுகாப்புடன் கையாள வேண்டியது தொழிலாளர்களின் கடமை. அதுமட்டுமின்றி தொழிலக பகுதிகளில் மது அருந்திவிட்டு பணி புரிவது உயிருக்கு ஆபத்தான செயலை ஏற்படுத்தும்.
எனவே மது அருந்திவிட்டு குடிபோதையில் ஈடுபட்டால் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். மேலும் பணி பதிவேட்டில் பதிவும் செய்யப்படும்.
இவ்வாறு என்.எல்.சி. சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel