அமெரிக்காவில் கடைகளில் திருடிய நாய் கைது
கிளிண்டன், டிச.19-
அமெரிக்காவில், கடைகளில் திருடி வந்த ஒரு நாய் கைது செய்யப்பட்டது. தெற்கு கரோலினா மாநிலம் கிளிண்டனில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இச்சம்பவம் நடைபெற்றது. அங்கு அடிக்கடி பொருட்கள் திருடுபோய் வந்தன.
திருடனை கண்டுபிடிப்பதற்காக, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கடை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளி ஒரு நாய் என அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். அந்த நாய், கதவு திறக்கும் வரை காத்திருப்பதும், கதவு திறந்தவுடன் உள்ளே நுழைந்து, நாய்களுக்கான உணவு பொருட்கள், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்வதும், பிறகு அருகில் உள்ள இடத்தில் அப்பொருட்களை புதைத்து வைப்பதும் பதிவாகி இருந்தது.
அதுபோல், வேறு சில பெரிய கடைகளிலும் அந்நாய் இதேபோல் திருடி உள்ளது. கடைக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் அந்த நாயை கைது செய்து கூண்டில் அடைத்தனர். தாங்கள் கைது செய்தவர்களில் இதுதான் சிறந்த கைது என்று போலீசார் வர்ணித்தனர். கடை ஊழியர்களோ, நாய் மீதான குற்றச்சாட்டுகளை வற்புறுத்தப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel