தேவயானி கைதுக்கு எதிர்ப்பு அமெரிக்க தூதரகம் முன்பு டெல்லியில் ஆர்ப்பாட்டம்
புதுடெல்லி: அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க தூதரகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.அமெரிக்காவில் இந்திய துணை தூதராக உள்ள தேவயானி கோப்ரகடேவை கடந்த வாரம் விசா மோசடி குற்றச்சாட்டுக்காக அமெரிக்க போலீசார் கைது செய்து, ஆடையை கலைத்து சோதனையும் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு, பாதுகாப்பு, சலுகைகள் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தது.
டெல்லியில் அமெரிக்க தூதரகம் எதிரே அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை போலீசார் அகற்றினர்.இந்நிலையில், தேவயானி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக டெல்லி பல்கலைக் கழக மாணவர்களும், பல்வேறு அமைப்பினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, அமெரிக்கா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel