தமிழ் ஹிந்தியைவிடச் சிறந்த மொழி – வைரமுத்து
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய வைரமுத்து தமிழ்தான் பெரிது என்று உணர்வு பொங்கப் பேசினார்.
“என்னிடம் வரும் எல்லா இயக்குனர்களையும் நான் சமமாக மதிக்கிறேன். எல்லோருக்கும் பாரபட்சமின்றியே உழைக்கிறேன். பெரிய இயக்குனர்களுக்கு எப்படி உழைக்கிறேனோ அதே போலவே புதிய இயக்குனர்களுக்கும் உழைக்கிறேன்.(ஆனால் பாட்டுக்கள் மட்டும் ஏனோ வேறு வேறு குவாலிட்டியில் வந்துவிடுகின்றன. என்ன செய்வது ?) . இதில் பணம் பெரிதல்ல. தமிழ்தான் பெரிது.
மணிரத்னம் ‘ராவணன்‘ படத்தை தமிழிலும் இந்தியிலும் ஒரே நேரத்தில் எடுத்தார். ஹிந்தியில் புகழ் பெற்ற கவிஞர் குல்சார் பாடல்களை எழுதினார். தமிழில் நான் எழுதினேன். தமிழ் வரிகளையும், ஹிந்தி வரிகளையும் சேர்ந்து படித்தவர்கள் என்னிடம் ஹிந்தி பாடல் வரிகளை விட தமிழ்ப் பாடல் வரிகள் நன்றாக இருப்பதாகக் கூறினர். நான் கூறினேன். ‘இருக்கலாம். குல்சார் என்னைவிடச் சிறந்த கவிஞர் தான். ஆனால் தமிழ் ஹிந்தி மொழியை விடச் சிறந்த மொழி. அதனால் இருக்கலாம்‘ என்றேன்“.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel