சிங்கப்பூர் கலவரம்: மேலும் 5 தமிழர்கள் மீது கோர்ட்டில் குற்றச்சாட்டு
சிங்கப்பூர், டிச. 12–
சிங்கப்பூரில் நடந்த பஸ் விபத்தில் புதுக்கோட்டை சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த குமாரவேல் பலியானார். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் வாகனத்துக்கு தீ வைக்கப்பட்டது. பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டது.
இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக தமிழர்களை சிங்கப்பூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இதுவரை 27 தமிழர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இன்று மேலும் 5 தமிழர்கள் மீது கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel