ஜனாதிபதியின் சமையல்காரர்
அமெரிக்காவில் வெளியாகியிருக்கிறது ‘தி பட்லர்’ என்கிற ஹாலிவுட் திரைப்படம். யூஜின் ஆலன் என்கிற அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதிகளின் சமையல்காரராயிருந்த சமையல்காரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இப்படம்.
1952லிருந்து 1986 வரை வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணியாற்றும் சிசில் என்கிற சமையல்காரப் பாத்திரமாக கதை விரிகிறது. இந்த சமையல்காரர் தனது வாழ்நாளில் பல முக்கிய ஜனாதிபதிகளுக்கு சமையல் பரிமாறுகிறார்.
வரலாற்றில் அமெரிக்கா எடுத்த பல முக்கிய முடிவுகளை அவர் தனது கண்களால் நேரே காணும் அனுபவம் பெறுகிறார். இவ்வாறாக அமெரிக்க ஜனாதிபதிகளின் சொகுசான வாழ்க்கையை படம் பிடிப்பதுடன் அவர்கள் நாட்டு நலனுக்காக மிகவும் கஷ்டப்பட்டார்கள் என்று நிறுவுவதற்காக எழுதப்பட்ட திரைக்கதை இது.
திரைக்கதையில் அங்கே சுவாரஸ்யம் இருப்பதை உணர்ந்து அதை பயன்படுத்தி படத்தின் கதை கொண்டு செல்லப்படுகிறது. படத்தில் சுமார் 10 அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு மேல் வருகிறார்கள். ஆபிரகாம் லிங்கன் முதல் தற்போதையை பராக் ஒபாமா வரை எல்லோரும் வருகிறார்கள்.
பராக் ஒபாமாவாக நடிக்க சரியான ஆள் கிடைக்கவில்லையாம். பின்பு கஷ்டப்பட்டு தேடி படத்தில் இருக்கும் எரிக் ஸ்ட்ரீட் என்பவரை கண்டுபிடித்தார்களாம். வெளியிடப்பட்ட இந்தப் படம் நிறைய பாராட்டுதல்களை பெற ஆரம்பித்துள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel