தேர்தல் முடிவுகளை பேஸ்புக்கில் வெளியிட ஆணையம் தயார்
புதுடெல்லி:டெல்லி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.
ராஜஸ்தான் மற்றும் டெல்லி தவிர மற்ற 3 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. ராஜஸ்தானில் வரும் 1ம் தேதியும், டெல்லியில் வரும் 4ம் தேதியும் வாக்கு பதிவு நடைபெறுகிறது. 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் 8ம் தேதி எண்ணப்படுகின்றன.
இந்த தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலை தளங்களில் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அக்கவுன்ட் உள்ளது.
இந்தியாவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பேஸ்புக் வாடிக்கையாளர்களாக உள்ளனர். டுவிட்டருக்கு 8 கோடி மக்கள் ஆதரவு உள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் பேஸ்புக் பக்கத்துக்கு 130 வாடிக்கையாளர்களும், டுவிட்டருக்கு 120 வாடிக்கையாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இதுவரை முக்கிய செய்திகள் எதையும் தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதனால் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் இருப்பதாக ஆணைய உயர் அதிகாரி தெரிவித்தார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet