சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் பதற்றம்
வாஷிங்டன்,
சீனா தடை விதித்துள்ள பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பறந்ததால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது.
சீனாவின் உத்தரவு
சீனாவில் கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் இருக்கின்றன. இந்த தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தாவா இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அந்தப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கும், அதன் நேச நாடான ஜப்பானுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் பகுதியில் இதுவரை தொடர்ந்து வருகிற நிலையை சீர்குலைக்கும் முயற்சி இது என்று அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் கூறினார்.
அமெரிக்க போர் விமானங்கள்
இந்த நிலையில் அந்த பிரச்சினைக்குரிய பகுதியின்மீது அமெரிக்காவின் பி&52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன. ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பெய்ஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகத்தின் அமெரிக்க&சீன உறவுகள் மையத்தை சேர்ந்த பேராசிரியர் சன் ஜெ கருத்து தெரிவிக்கையில், Ò இதேபோன்று இன்னும் இரண்டு அல்லது மூன்று விமானங்களை அமெரிக்கா அனுப்பினால், சீனாவும் இதே பாணியில் பதிலடி கொடுக்க நேரிடும். சீனா வார்த்தையாலே மட்டும் பதில் சொல்லிக்கொண்டிருக்குமானால் அது இழிவானதாக அமைந்து விடும்Ó என கூறினார்.
கண்காணிக்கப்பட்டனவா?
சீன ராணுவ அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், Òஅமெரிக்க போர் விமானங்கள் பறந்ததை முழுமையாகக் கண்காணித்தோம்Ó என்றது. ஆனால் அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், Òஅமெரிக்க போர் விமானங்கள் கூர்ந்து கவனிக்கப்படவில்லைÓ என மறுத்துள்ளது.
இதற்கிடையே சீனாவில் பிரச்சினைக்குரிய பகுதியில் அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சி என்ற பெயரில் பறந்திருப்பது நீண்ட காலம் திட்டமிட்டு நிறைவேற்றிய பயணம், இரண்டு போர் விமானங்கள் குவாமில் இருந்து புறப்பட்டு சென்று குவாமுக்கு திரும்பின என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் கர்னல் ஸ்டீவன் வார்ரன் தெரிவித்தார்.
ஜப்பானும் மீறியது
அமெரிக்க போர் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறந்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.
அதை அந்த விமான நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன. சீனாவின் உத்தரவை மீறியதால் பயணிகள் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் சிவில் விமான தொழில் சங்கம் கூறி உள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet