‘ஹெலன்’ புயல் தாக்கம் புதுவையில் கன மழை
புதுச்சேரி, நவ.22–
ஹெலன் புயலின் தாக்கத்தையொட்டி புதுவையில் அதிகாலை தொடங்கி மழை பெய்து வருகிறது.
மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து புயலாக மாறியுள்ளது. அதற்கு ‘ஹெலன்’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
‘ஹெலன்’ புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. அது ஆந்திர மாநிலம் மசூலிபட்டினம் அருகே மையம் கொண்டுள்ளது. புயல் இன்று (வெள்ளிக் கிழமை) மாலை மசூலிப்பட்டினம் அருகே கரையை கடக்கும்.
‘ஹெலன்’ புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சில பகுதிகளிலும் புதுவையிலும் மழை பெய்ய கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் புதுவையில் மழை பெய்ய தொடங்கி உள்ளது.
அவ்வப்போது விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. அதோடு குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது. மேலும் வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது.
புதுவை துறைமுகத்தில் 2–ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
ஆந்திராவை புயல் நெருங்கி உள்ள சூழலில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் நேற்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே பராமரிப்பு பணி காரணமாக ஏனாமில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் மின் பாதையில் பழுது ஏற்பட்டதால் இரவு வரை மின்சாரம் வரவில்லை. இதனால் ஏனாம் மக்கள் சிரமத்துக்குள்ளானார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet