வெடிகுண்டு அச்சுறுத்தலால் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட பயணிகள்
கொலம்பஸ், நவ.19-
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமான போயிங் எம்டி-80 நேற்று டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் விமான நிலையத்திலிருந்து 133 பயணிகளுடநும், 5 ஊழியர்களுடனும் புறப்பட்டது. இது டல்லாசின் போர்ட் வொர்த் விமான நிலையத்திலிருந்து இயங்கும் திட்டமிடப்பட்ட பயணமாகும்.
இந்த விமானம் ஓஹியோ மாநிலத்தின் போர்ட் கொலம்பஸ் சர்வதேச விமானநிலையத்தில் தரை இறங்கும் முன்னர் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு எச்சரிக்கை தகவல் நிலையத்தாருக்கு கிடைத்துள்ளது.
இதனால் விமானம் ஓஹியோவில் தரையிறங்கியபின்னர் அதிலிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமானம் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. விமானக் காவல்துறையினர், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகம், புலனாய்வுத்துறை மற்றும் வெடிகுண்டு கண்டறியும் அணியினர் ஆகியோர் விமானத்தினுள் சோதனையில் ஈடுபட்டனர்.
இது ஒரு வழக்கமான பாதுகாப்பு சோதனை என்றும், அதிகாரிகளின் ஒப்புதலுக்குப் பின்னர் விமானம் நிலையத்தின் டெர்மினல் உள்ளே கொண்டுவரப்பட்ட்டது என்றும் பிராந்திய விமான அதிகாரியான ஆஞ்சி டாபோர் தெரிவித்தார். அச்சுறுத்தல் எங்கிருந்து வந்தது என்பது பற்றிய விபரத்தை அவர் வெளியிடவில்லை.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet