அப்துல் கலாம் தவறி விழுந்ததால் தலையில் அடிபட்டது: உடல் நிலை தேறுகிறது
புதுடெல்லி, நவ. 19–
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மாணவ – மாணவிகளை சந்தித்து கலந்துரையாடி வருகிறார். டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை அவர் திடீர் என்று வீட்டில் மயங்கி விழுந்தார். உடனே அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
கீழே தவறி விழுந்ததில் அவரது தலையின் நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவர் குணம் அடைந்து வருவதாகவும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet