சத்தீஸ்கரில் நாளை 2–ம் கட்ட தேர்தல்: 72 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு
ராய்ப்பூர், நவ.18–
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 11–ந்தேதி 12 சட்டசபை தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
சுமார் 1½ லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு, அந்த முதல்கட்ட தேர்தல் நடந்தது. அதில் சுமார் 67 சதவீத வாக்குகள் பதிவானது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 18 தொகுதிகளுக்கு ஓட்டுப் பதிவு நடந்து விட்ட நிலையில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த 72 தொகுதிகளும் 19 மாவட்டங்களில் உள்ளன. நேற்று மாலையுடன் இந்த 19 மாவட்டங்களிலும் பிரசாரம் ஓய்ந்தது.
நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்ட தேர்தல் போலவே இரண்டாம் கட்ட தேர்தலிலும் அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆளும் பா.ஜ.க. முதல்– மந்திரி ராமன்சிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்து கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று 5 சிமி தீவிரவாதிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாட்னா குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு உதவி செய்தவர்கள் என்று கூறப்படுகிறது.
கைதான 5 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet