புயல் இன்று மாலை கரையைக் கடக்கிறது
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை கரையைக் கடக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது, சென்னைக்கு தென்கிழக்கே 350 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு 150 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த தாழ்வு மண்டலம், இன்று மாலை சென்னைக்கும், நாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், கடலூர், நாகை, விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில், பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. மழை காரணமாக இன்று நடைபெற இருந்த பல்கலைக் கழகத் தேர்வுகள், மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet