திருவண்ணாமலையில் நாளை கார்த்திகை மகா தீபம் லட்சக்கணக்கான மக்கள் வருகை
திருவண்ணாமலை:நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் உச்சக்கட்ட திருவிழாவான கார்த்திகை மகா தீபத் திருவிழா நாளை நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலையார் மலையில் மகாதீபம் ஏற்றப்படும்.
மலையில் மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள்வார்கள். அப்போது சில நொடிகள் மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்டவத்தில் காட்சி அளிப்பார். இந்நிகழ்ச்சி ஆண்டுக்கு ஒரு முறைதான் நடக்கும். அப்போது, கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இந்த மகாதீப தரிசனத்தை காண இந்தியா முழுவதும் இருந்து சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகா தீபம் ஏற்றுவதற்காக சுமார் 200 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, இன்று அதிகாலை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர். தீபம் ஏற்றுவதற்காக 3,500 கிலோ நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் திரி ஆகியவை நாளை காலை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை மாலை ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு மலை உச்சியில் பிரகாசிக்கும்.
மகா தீப தரிசனத்தை காண திருவண்ணாமலையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, ஏடிஜிபி ராஜேந்திரன், வடக்கு மண்டல ஐஜி மஞ்சுநாதா ஆகியோர் தலைமையில், 4 டிஐஜிக்கள், 13 எஸ்.பி.க்கள், 20 கூடுதல் எஸ்.பி.க்கள், 80 டிஎஸ்பி.க்கள் உள்பட 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், அதிரடி படையினர் (கமாண்டோ) ஆகியோரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு 2,300 சிறப்பு பஸ்கள், 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet