காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்; சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும். இந்தியா சார்பில் யாரும் செல்லக்கூடாது என்று தமிழக சட்டசபையின் அவசர கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் 15 ஆம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் லட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களை கொன்று குவித்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
“இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும்” என்ற தீர்மானத்தை, கடந்த 24-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில், முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார். இந்த தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மற்றும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் எதிர்ப்பு போராட்டம் காரணமாக காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
காமன்வெல்த் மாநாட்டில் சல்மான் குர்ஷித் பங்கேற்கவும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. மேலும் மாநிலம் முழுவதும் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று கைதானார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet