ஒரே நாளில் 50,000 கோடி ரூபாய்க்கு வியாபாரம்: புதிய உலக சாதனை
சீனாவை சேர்ந்த ஒரு ஆன்லைன் விற்பனை நிறுவனம் ஒரே நாளில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து புதிய சாதனை புரிந்துள்ளது.
சீனாவின் புகழ்பெற்ற அலிபாபா நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான ‘டி மால்’ நேற்று ஒரேநாளில் ரூ.50ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து புதிய சாதனையை புரிந்துள்ளது.
‘டி மால்’ தவிர வேறு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களை நிர்வாகிக்கும் அலிபாபா நிறுவனம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதியை ‘சிங்கிள்ஸ் டே’ என அறிவித்து, அன்று வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களில் பிரத்யேக சலுகைகளை வழங்கிவந்தது.
நேற்று முன் தினம் நள்ளிரவில் தனது சாதனை முயற்சி விற்பனையை தொடங்கியது டி மால். விற்பனையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்த மக்கள் உடனடியாக போட்டி போட்டுக் கொண்டு பொருட்களை முன்பதிவு செய்யத் தொடங்கினர்.
இதனால், நேற்று ஒரேநாளில், இந்த ஆன்லைன் இணையதளம் மூலம், சீனா முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் தேவையானவற்றை வாங்கினர். இதன் மூலம் ஒரே நாளில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆனதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சீனா வரலாற்றில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் ஒரே நாளில் அமெரிக்க ஆன்லைன் இணையதள நிறுவனம் செய்திருந்த வியாபாரத்தை விட இது 2 1/2 மடங்கு அதிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet