திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது
திருப்பதி, நவ. 9–
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் கடந்த 2 நாட்களாக அதிகரித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.
வைகுண்டம் 2–வது கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் கோவிலுக்கு வெளியே 500 மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்துக்கு காத்து நின்றனர். தர்ம தரிசனத்துக்கு 22 மணி நேரம் ஆகிறது.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர். இங்குள்ள 10 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்தது.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) கோவிலில் புஷ்ப யாகம் நடக்கிறது. கோவில் மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்ப சாமியை எழுந்தருளச் செய்து புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.
இதற்காக 18 வகையான மலர்கள் தருவிக்கப்பட்டு உள்ளது. 7 டன் மலர்களால் மலையப்பசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. புஷ்ப யாகத்தை முன்னிட்டு ஏழுமலையானுக்கு வழக்கமாக காலை நடக்கும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படுகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet