வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்:
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமா, அமெரிக்க வாழ் இந்தியக் குழந்தைகளுடன் வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது, பாலிவுட் பாடலுக்கு அவர் நடனமாடினார்.
வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நடன நிகழ்ச்சிக்கு, நியூயார்க் நகரில் புகழ்பெற்ற அமெரிக்க-இந்திய இசைக்குழுவான “கோல்டு ஸ்பாட் குழு’ வரவழைக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமாவின் அரசு நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மிஷெல் ஒபாமா அணிந்திருந்த உடையை வடிவமைத்த அமெரிக்க இந்தியரான நயீம் கானும் கலந்து கொண்டார். முன்னதாக, வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை மிஷெல் ஒபாமா, குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதன்பின், வேத மந்திரங்களும் ஓதப்பட்டன. இந்த நிகழ்ச்சியின்போது மிஷெல் ஒபாமா கூறியது:
உலகின் மிகத் தொன்மையான மதங்களில் ஒன்றான இந்து மதம் சார்பில் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி.
இது அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒபாமாவும், நானும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, தீபாவளி என்பது கொண்டாடுவதற்கான தருணம் என்பதை அறிந்து கொண்டோம்.
நமது கடமைகள் குறித்தும், சக மனிதர்களுக்கு நல்வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும் இந்த நன்னாளில் நாம் சிந்தனை செய்ய வேண்டும் என்று மிஷெல் கூறினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet